2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2015 Sri Lankan parliamentary election ) 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது. 10 மாதங்களுக்கு முன்கூட்டியே நடைபெற்ற இத்தேர்தலில் இலங்கையின் 15வது நாடாளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவாகவுள்ளனர்.[ 3] [ 4] [ 5] 2015 சூன் 26 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[ 6] தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[ 7] [ 8] [ 9] [ 10]
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி [ 1] 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது.[ 11] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும்,[ 11] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின.[ 11] மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு [ 12] (1) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) ஆகியன கைப்பற்றின.
கடைசி நாடாளுமன்றத் தேர்தல் 2010 ஏப்ரலில் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றி கொண்ட பின்னர் இத்தேர்தலில் 144 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்தது.[ 13] 2010 செப்டம்பரில் சில சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 18வது திருத்தத்தை நிறைவேற்றியது. அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் நிறைவேற்றதிகாரங்களை அதிகரிக்கவும் அரசுத்தலைவருக்கான அதிகபட்சம் இரண்டு தவணைக்காலங்களை நீக்கவும் இத்திருத்தம் வழிவகுத்தது.[ 14] அத்துடன் தலைமை நீதிபதியை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியில் இருந்து அகற்றியது.[ 15]
அரசுத்தலைவர் ராசபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட்டியே 2014 நவம்பரில் அரசுத்தலைவர் தேர்தலை நடத்த அறிவித்தார்.[ 16] ராசபக்சவின் அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக இருந்த மைத்திரிபால சிறிசேன எவரும் எதிர்பார்க்காத நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[ 17] 2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் சிறிசேன ராசபக்சவை வென்று புதிய அரசுத் தலைவர் ஆனார்.[ 18] சிறிசேன எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசை அமைத்தார்.[ 19] 2015 மார்ச்சில் தேசிய அரசாங்கம் ஒன்றை அறிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முக்கிய கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்த்தார்.[ 20]
தனது தேர்தல் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேன 100-நாள் வேலைத்திட்டத்தை அறிவித்து, அதன் பின்னர் நாடாளுமன்றம் 2015 மார்ச் 27 இல் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.[ 21] தனது 100-நாள் திட்டத்திற்கு அரசில் இருந்த ராசபக்சவின் ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். ஆனாலும், அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கவும், பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்குக் குறைக்கவும் வழிவகுக்கக்கூடிய 19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினார்.[ 22] சிறிசேன 2015 சூன் 26 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.[ 23]
பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள் , மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[ 24] [ 25] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.[ 26]
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம்.[ 27] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆளடையாளத்தை செல்லுபடியான ஆளடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும்.[ 27] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[ 27]
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[ 3] [ 10] தபால் மூல வாக்கெடுப்பு 2015 ஆகத்து 5 முதல் ஆகத்து 6 வரை நடைபெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் அரச ஊழியர்கள் 2015 ஆகத்து 3 இல் தபால் மூலம் வாக்களித்தனர்.[ 28] [ 29] பொதுமக்கள் ஆகத்து 17 திங்கட்கிழமை அன்று வாக்களித்தனர்.[ 7]
தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு[ தொகு ]
போட்டியிட்ட கட்சிகளும் கூட்டணிகளும்[ தொகு ]
நாடாளுமன்றத்தின் 196 இடங்களுக்கு 21 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் இருந்து 3,653 பேரும், சுயேட்சைக் குழுக்களில் இருந்து 2,498 பேரும் போட்டியிட்டனர்.[ 10] [ 31] 12 கட்சிகள், 24 குழுக்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.[ 32] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி , நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி , மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகியன அனைத்து 22 மாவட்டங்களிலும் போட்டியிட்டன.[ 10]
ஜாதிக எல உறுமய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐதேக) இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாமையால் ஐதேகவின் யானை சின்னத்தில் போட்டியிட்டது. இக்கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய இடது முன்னணி, மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சில மூத்த அமைச்சர்கள் (ராஜித சேனரத்தின, அர்ஜுன ரணதுங்க, சரத் அமுனுகம) ஆகியோரும் இடம்பெற்றனர்.[ 33]
இலங்கையின் முக்கிய முசுலிம் அரசியல் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் தனித்து "மரம்" சின்னத்திலும், புத்தளம், களுத்துறை, அம்பாறை, குருநாகல், கண்டி, கம்பகா, திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் "யானை" சின்னத்திலும் போட்டியிட்டது.[ 34]
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஐதேகவின் யானைச் சின்னத்தின் கீழ் கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பகா மாவட்டங்களில் போட்டியிட்டது.[ 35]
பௌத்த மதவாத இயக்கமான பொது பல சேனா பொது சன பெரமுனை என்ற புதிய கட்சியை அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.[ 36]
மக்கள் விடுதலை முன்னணி .[ 37] சரத் பொன்சேகா தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி [ 38] ஆகியன தனித்துப் போட்டியிட்டன.
2015 சூன் 29 அன்று ஐதேக ஆதரவாளர் ஒருவர் இரத்தினபுரி மாவட்டம் , நிவித்திகலையில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[ 39] [ 40] அனுராதபுரம் , குருணாகல் , மகியங்கனை, வெலிகமை ஆகிய இடங்களில் ஐதேக, ஐமசுகூ ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்புகள் இடம்பெற்றன.[ 41] [ 42] 2015 சூலை 31 இல் கொட்டாஞ்சேனையில் ஐதேக வேட்பாளரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க கலந்து கொண்ட கூட்டம் ஒன்றை நோக்கி இரண்டு வாகனங்களில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.[ 43] [ 44] 2015 ஆகத்து 15 அன்று மட்டக்களப்பு மாவட்டம் , ஓட்டமாவடி வீதி ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[ 45]
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 45.66% வாக்குகளுடன் 106 இடங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 42.38% வாக்குகளுடன் 95 இடங்களைக் கைப்பற்றியது.[ 46] [ 47] ராசபக்ச பிரதமராக வரும் தனது முயற்சியைக் கைவிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டார்.[ 48] [ 49]
ஐதேக தலைமையிலான நஐதேமு ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது.[ 50] [ 51] 2015 ஆகத்து 20 ஆம் நாள் இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது.[ 52] [ 53] ரணில் விக்கிரமசிங்க 2015 ஆகத்து 21 அன்று இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.[ 54] [ 55] புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க , ஐதேக பொதுச் செயலர் கபீர் ஹாசிம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.[ 56] [ 57]
மாவட்டம் வாரியாக வெற்றியீட்டிய கட்சிகள்
[உரை ] – [தொகு ] 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும்
வாக்குகள்
%
இருக்கைகள்
மாவட்டம்
தேசியப் பட்டியல்
மொத்தம்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி [ 58]
5,098,916
45.66%
93
13
106
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
4,732,664
42.38%
83
12
95
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ 63]
515,963
4.62%
14
2
16
மக்கள் விடுதலை முன்னணி
543,944
4.87%
4
2
6
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு [ 12]
44,193
0.40%
1
0
1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
33,481
0.30%
1
0
1
சுயேட்சைகள்
42,828
0.38%
0
0
0
அகில இலங்கை மக்கள் காங்கிரசு [ 59]
33,102
0.30%
0
0
0
சனநாயகக் கட்சி
28,587
0.26%
0
0
0
பௌத்த மக்கள் முன்னணி
20,377
0.18%
0
0
0
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி [ 64]
18,644
0.17%
0
0
0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் [ 60]
17,107
0.15%
0
0
0
முன்னிலை சோசலிசக் கட்சி
7,349
0.07%
0
0
0
ஐக்கிய மக்கள் கட்சி
5,353
0.05%
0
0
0
ஏனையோர்
24,467
0.22%
0
0
0
தகுதியான வாக்குகள்
11,166,975
100.00%
196
29
225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
517,123
மொத்த வாக்குகள்
11,684,098
பதிவு செய்த வாக்காளர்கள்
15,044,490
வாக்குவீதம்
77.66%
(நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி )
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு )
மாவட்ட வாரியாக 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் [ 65]
தேர்தல் மாவட்டம்
மாகாணம்
ஐதேக
ஐமசுகூ
ததேகூ
மவிமு
ஏனையோர்
மொத்தம்
%
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
யாழ்ப்பாணம்
வடக்கு
20,025
6.67%
1
17,309
5.76%
0
207,577
69.12%
5
247
0.08%
0
55,148
18.36%
1
300,309
100.00%
7
61.56%
வன்னி
வடக்கு
39,513
23.98%
1
20,965
12.72%
1
89,886
54.55%
4
876
0.53%
0
13,535
8.21%
0
164,775
100.00%
6
71.89%
திருகோணமலை
கிழக்கு
83,638
46.36%
2
38,463
21.32%
1
45,894
25.44%
1
2,556
1.42%
0
9,845
5.46%
0
180,396
100.00%
4
74.34%
மட்டக்களப்பு
கிழக்கு
32,359
13.55%
1
32,232
13.49%
0
127,185
53.25
3
81
0.03%
0
38,477
16.11%
1
238,846
100.00%
5
69.11%
அம்பாறை
கிழக்கு
151,013
46.30%
4
89,334
27.39%
2
45,421
13.92%
1
5,391
1.65%
0
35,037
10.74%
0
326,195
100.00%
7
73.99%
பொலன்னறுவை
வடமத்திய
118,845
50.26%
3
103,172
43.63%
2
-
-
-
13,497
5.71%
0
948
0.40%
0
236,462
100.00%
5
79.81%
அனுராதபுரம்
வடமத்திய
213,072
44.82%
4
229,856
48.35%
5
-
-
-
28,701
6.04%
0
3,755
0.79%
0
475,383
100.00%
9
79.13%
பதுளை
ஊவா
258,844
54.76%
5
179,459
37.97%
3
-
-
-
21,445
4.54%
0
12,934
2.74%
0
472,682
100.00%
8
80.07%
மொனராகலை
ஊவா
110,372
41.97%
2
138,136
52.53%
3
-
-
-
13,626
5.18%
0
855
0.33%
0
262,988
100.00%
5
80.13%
கேகாலை
சபரகமுவா
247,467
49.52%
5
227,208
45.47%
4
-
-
-
18,184
3.64%
0
6,789
1.37%
0
499,694
100.00%
9
79.81%
இரத்தினபுரி
சபரகமுவா
284,117
44.94%
5
323,636
51.19%
6
-
-
-
21,525
3.40%
0
2,918
0.46%
0
632,196
100.00%
11
80.88%
காலி
தெற்கு
265,810
42.48%
4
312,518
50.07%
6
-
-
-
37,778
6.05%
0
8,735
1.40%
0
624,211
100.00%
10
78.00%
அம்பாந்தோட்டை
தெற்கு
130,433
35.65%
2
196,980
53.84%
4
-
-
-
36,527
9.98%
1
1,889
0.52%
0
365,829
100.00%
7
81.20%
மாத்தறை
தெற்கு
186,675
39.08%
3
250,505
52.44%
5
-
-
-
35,270
7.38%
0
5,277
1.10%
0
477,717
100.00%
8
78.61%
கொழும்பு
மேற்கு
640,743
53.00%
11
474,063
39.21%
7
-
-
-
81,391
6.73%
1
12,702
1.05%
0
1,208,899
100.00%
19
78.93%
கம்பகா
மேற்கு
577,004
47.13%
9
549,958
44.92%
8
-
-
-
87,880
7.18%
1
9,507
0.78%
0
1,224,401
100.00%
18
78.21%
களுத்துறை
மேற்கு
310,234
44.47%
4
338,801
48.56%
5
-
-
-
38,475
5.52%
1
10,125
1.45%
0
697,635
100.00%
10
80.13%
புத்தளம்
வடமேற்கு
180,185
50.40%
5
153,130
42.83%
3
-
-
-
12,211
3.42%
0
11,982
3.35%
0
357,508
100.00%
8
68.83%
குருணாகலை
வடமேற்கு
441,275
45.85%
7
474,124
49.26%
8
-
-
-
41,077
4.27%
0
5,947
0.62%
0
962,423
100.00%
15
79.63%
கண்டி
மத்திய
440,761
55.57%
7
309,152
38.98%
5
-
-
-
30,669
3.87%
0
12,518
1.58%
0
793,100
100.00%
12
79.13%
மாத்தளை
மத்திய
138,241
49.84%
3
126,315
45.54%
2
-
-
-
10,947
3.95%
0
1,877
0.68%
0
277,380
100.00%
5
78.73%
நுவரெலியா
மத்திய
228,920
59.01%
5
147,348
37.98%
3
-
-
-
5,590
1.44%
0
6,088
1.57%
0
387,946
100.00%
8
78.77%
தேசியப் பட்டியல்
13
12
2
2
29
மொத்தம்
5,098,916
45.66%
106
4,732,664
42.38%
95
515,963
4.62%
16
543,944
4.87%
6
275,488
2.47%
2
11,166,975
100.00%
225
74.23%
உலக நாடுகளின் கருத்து[ தொகு ]
ஐக்கிய நாடுகள் - பொதுச் செயலர் பான் கி மூன் 2015 ஆகத்து 18 இல் விடுத்த அறிக்கையில், "மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த பொதுத் தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன்", "நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கங்களில் மேலும் முன்னேற்றங்கள் மேற்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.[ 66] [ 67]
இந்தியா - பிரதமர் நரேந்திர மோதி ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.[ 68] [ 69]
மேற்கோள்களும் குறிப்புகளும்[ தொகு ]
↑ 1.0 1.1 2010 தேர்தலில் தற்போது கலைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி (UNF) என்ற கூட்டணி பெற்ற இடங்கள் 60. இக்கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகள் (ஐதேக , ஜமமு , முகா ஆகியவற்றுடன் அஇமகா , ஜாஎஉ , ஐக்கிய இடது முன்னனி, மலையக மக்கள் முன்னணி ஆகியன நஐதேமு) என்ற கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன.
↑ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமையினால் அது இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது.
↑ 3.0 3.1 "PART I : SECTION (I) — GENERAL Proclamations & C., by the President A PROCLAMATION BY HIS EXCELLENCY THE PRESIDENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA" . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1920/38 . 26 June 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_38/1920_38%20E.pdf . பார்த்த நாள்: 26 ஜூன் 2015 .
↑ "Sri Lanka's president dissolves parliament" . பிபிசி . 26 June 2015. http://www.bbc.co.uk/news/world-asia-33292592 .
↑ "Sri Lanka's President Maithripala Sirisena dissolves parliament" . Times of Oman . Agence France-Presse. 26 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2018-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181118113819/https://timesofoman.com/article/60705/World/Asia/Sri-Lanka-President-Maithripala-Sirisena-dismisses-parliament-snap-elections-likely-on-August-17 .
↑ Ramakrishnan, T. (26 சூன் 2015). "Sri Lankan Parliament dissolved" . தி இந்து . http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankan-parliament-dissolved/article7358638.ece .
↑ 7.0 7.1 "Polls on Aug. 17" . டெய்லிமிரர் . 26 சூன் 2015. http://www.dailymirror.lk/77787/polls-on-aug-17 .
↑ "Parliament dissolved" . 26 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150629042055/http://nation.lk/online/2015/06/26/parliament-dissolved/ .
↑ "Sri Lanka parliament dissolved, elections on August 17" . Colombo Page . 26 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-06-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150627090327/http://www.colombopage.com/archive_15B/Jun26_1435331386CH.php .
↑ 10.0 10.1 10.2 10.3 Edirisinghe, Dasun (14 July 2015). "August 17 polls: More than 6,100 ready for the fray" . தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150714205950/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=128231 .
↑ 11.0 11.1 11.2 "Bonus seats: UNP 13, UPFA 12" . டெய்லிமிரர் . 18 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83911/bonus-seats-unp-13-upfa-12 .
↑ 12.0 12.1 12.2 முகா மட்டக்களப்பு , வன்னி மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவிலும் போட்டியிட்டது.
↑ Sirilal, Ranga (20 ஏப்ரல் 2010). "Sri Lanka ruling party records landslide win at polls" . ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2015-06-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150627064544/http://uk.reuters.com/article/2010/04/20/srilanka-politics-idUSSGE63I0LL20100420 .
↑ "Sri Lanka MPs vote in sweeping powers for president" . பிபிசி . 8 செப்டெம்பர் 2010. http://www.bbc.co.uk/news/world-south-asia-11225723 .
↑ Ondaatjie, Anusha (21 நவம்பர் 2014). "Sri Lankan president to face challenge from ally" . சிகாகோ டிரிபியூன் இம் மூலத்தில் இருந்து 2014-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141225120105/http://www.chicagotribune.com/sns-wp-blm-news-bc-srilanka21-20141121-story.html .
↑ "Presidential poll Jan. 8; Nominations on Dec. 8" . டெய்லிமிரர் . 21 நவ. 2014. http://www.dailymirror.lk/57111/presidential-polls-jan-8-nominations-on-dec-8 .
↑ "I'm the common candidate: Maithripala" . டெய்லிமிரர் . 21 நவ. 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141217021008/http://www.dailymirror.lk/budget/57103 .
↑ "Sri Lanka's Rajapaksa suffers shock election defeat" . பிபிசி . 9 சன. 2015. http://www.bbc.co.uk/news/world-asia-30738671 .
↑ "New Cabinet takes oaths" . த நேசன் . 12 சன. 2015 இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html .
↑ Aneez, Shihar; Sirilal, Ranga (22 மார்ச் 2015). "Sri Lanka's Sirisena forms national govt with opposition" . மெயில் ஒன்லைன் . ராய்ட்டர்ஸ் . http://www.dailymail.co.uk/wires/reuters/article-3006540/Sri-Lankas-Sirisena-forms-national-govt-opposition.html .
↑ "Sri Lanka's Sirisena announces parliamentary elections, swears in new cabinet" . டொச்ச வெல்லா . 12 சன. 2015. http://www.dw.com/en/sri-lankas-sirisena-announces-parliamentary-elections-swears-in-new-cabinet/a-18186301?maca=en-rss-en-asia-5133-rdf .
↑ Ondaatjie, Anusha. "Sirisena Calls Early Sri Lanka Election as Reform Hopes Dwindle" . புளூப்மர்க் நியூஸ் . http://www.bloomberg.com/news/articles/2015-06-26/sirisena-calls-early-sri-lanka-election-as-reform-hopes-dwindle .
↑ "Parliament dissolved" . சிலோன் டுடே . 26 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-06-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150627071347/http://www.ceylontoday.lk/16-96670-news-detail-parliament-dissolved.html .
↑ Blanc, Jarrett; Hylland, Aanund; Vollan, Kare (2006). State Structure and Electoral Systems in Post-Conflict Situations . International Foundation for Electoral Systems. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1931459177 .
↑ "Report of the Post-Election Assessment of Sri Lanka Mission: November 28 – December 2, 2000" (PDF) . National Democratic Institute for International Affairs. 28 டிசம்பர் 2000. p. 10. Archived from the original (PDF) on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 27, 2015 .
↑ Thilakarathne, N. M. C. (1997). "Parliament Library of Sri Lanka". In Brian, Rob (ed.). Parliamentary Libraries and Information Services of Asia and the Pacific: Papers prepared for the 62nd IFLA Conference Beijing, China August 25-31, 1996 . Walter de Gruyte. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3110947633 .
↑ 27.0 27.1 27.2 "Qualifications to register as an Elector" . தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-01-21. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015 .
↑ "Postal voting on August 5 and 6" . டெய்லிமிரர் . 8 சூலை 2015. http://www.dailymirror.lk/78861/postal-voting-on-august-5-and-6 .
↑ "Postal voting dates announced" . நேசன் . 8 சூலை 2015 இம் மூலத்தில் இருந்து 2015-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150714234214/http://nation.lk/online/2015/07/08/postal-voting-dates-announced/ .
↑ வீரகேசரி வாரவெளியீடு, கொழும்பு, 19 சூலை 2015.
↑ Bastians, Dharisha (14 சூலை 2015). "Candidates on crusade" . டெய்லி எஃப்டி . http://www.ft.lk/article/445361/Candidates-on-crusade .
↑ Perera, Chaminda (14 சூலை 2015). "It is all systems go" . டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2015-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150719014354/http://www.dailynews.lk/?q=local%2Fit-all-systems-go .
↑ "PM: Return of Rajapaksa regime won't be allowed" . தி ஐலண்டு. 13 சூலை 2015. Archived from the original on 2015-08-04. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015 .
↑ "SLMC to contest under UNP ticket" . டெய்லிமிரர். 10 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2015 .
↑ "த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி" . அததெரண. 10 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015 .
↑ "இலங்கை பொதுத் தேர்தலில் பி.ஜே.பி" . தினகரன். 29 சூன் 2015. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2015 .
↑ "Efforts to bring MS, MR together irk JVP" . தி ஐலண்டு. 1 சூலை 2015. Archived from the original on 2015-07-31. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2015 .
↑ "அன்னம் தனியாகதான் வரும்" . தமிழ்மிரர். 3 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2015 .
↑ "Man killed in Sri Lanka poll violence" . கல்ஃப் டைம்சு . ஏஎஃப்பி. 1 சூலை 2015. http://www.gulf-times.com/region/216/details/445397/man-killed-in-sri-lanka-poll-violence .
↑ "Sri Lanka Election monitor says killing of UNP supporter first election violence" . Colombo Page . 1 சூலை 2015 இம் மூலத்தில் இருந்து 2015-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150703085830/http://www.colombopage.com/archive_15B/Jul01_1435692389CH.php .
↑ Karunarathne, Waruni (5 சூலை 2015). "Increase In Election Violence" . த சண்டே லீடர் . http://www.thesundayleader.lk/2015/07/05/increase-in-election-violence/ .
↑ "Election related violence even before Nominations: Polls Monitors" . சண்டே டைம்சு . 5 சூலை 2015. http://www.sundaytimes.lk/150705/news/election-related-violence-even-before-nominations-polls-monitors-155577.html .
↑ "Death toll rises in Bloemendhal shooting" . சண்டே டைம்சு . 31 சூலை 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150814103102/http://www.sundaytimes.lk/news-online/death-toll-rise-in-bloemendhal-shooting.html .
↑ "Woman dies after gunmen open fire at election campaign rally in Sri Lanka; 12 people wounded" . ஏபிசி . ஏஎஃப்பி. 1 ஆகத்து 2015. http://www.abc.net.au/news/2015-07-31/woman-dies-in-deadly-shooting-at-sri-lanka-election-rally/6664700 .
↑ "மட்டக்களப்பில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் பலி" . பிபிசி. 15 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015 .
↑ "Rajapakse concedes election defeat as UNP secures 106 seats" . கல்ஃப் டைம்சு . ஏஎஃப்பி. 18 ஆகத்து 2015. http://www.gulf-times.com/sri%20lanka/251/details/451634/rajapakse-concedes-election-defeat-as-unp-secures-106-seats .
↑ "UNF Wins Sri Lanka Battle, Rajapaksa Concedes Defeat" . தி நியூ இந்தியன் எக்சுபிரசு . ஐஏஎன்எஸ். 18 ஆகத்து 2015. http://www.newindianexpress.com/world/UNF-Wins-Sri-Lanka-Battle-Rajapaksa-Concedes-Defeat/2015/08/18/article2981084.ece .
↑ "Former Sri Lankan president Mahinda Rajapaksa concedes defeat in bid to become PM" . ஏபிசி . 18 ஆகத்து 2015. http://www.abc.net.au/news/2015-08-18/sri-lanka-leader-rajapakse-concedes-election-defeat/6706490 .
↑ "MR concedes defeat" . டெய்லிநியூஸ் . 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150822130707/http://www.dailynews.lk/?q=local/mr-concedes-defeat .
↑ "Sri Lanka's prime minister defeats former president Rajapaksa in elections" . தி கார்டியன் . ராய்ட்டர்ஸ் . 18 ஆகத்து 2015. http://www.theguardian.com/world/2015/aug/18/sri-lanka-prime-minister-declares-victory-ranil-wickremesinghe .
↑ "Sri Lanka's PM defeats ex-president in elections" . அல்-ஜசீரா . 19 ஆகத்து 2015. http://www.aljazeera.com/news/2015/08/sri-lanka-elections-150818133605788.html .
↑ Edirisinghe, Dasun (21 ஆகத்து 2015). "SLFP CC for joining national government" . தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2018-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181111000101/http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=130304 .
↑ Bandara, Kelum (20 ஆகத்து 2015). "SLFP agrees to join National Govt." . டெய்லிமிரர் . http://www.dailymirror.lk/84145/slfp-cc-approves-national-govt .
↑ Liyanawatte, Dinuka (21 ஆகத்து 2015). "Wickremesinghe sworn in as Sri Lankan prime minister" . ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2015-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150821103436/http://www.reuters.com/article/2015/08/21/us-sri-lanka-government-idUSKCN0QQ0KP20150821 .
↑ Ramakrishnan, T. (21 ஆகத்து 2015). "Ranil Wickremesinghe sworn in as Sri Lankan Prime Minister" . தி இந்து . http://www.thehindu.com/news/international/ranil-wickremesinghe-sworn-in-as-sri-lankan-prime-minister/article7565796.ece .
↑ "UNP and SLFP sign MoU" . டெய்லிமிரர் . 21 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/84245/unp-and-slfp-sign-mou .
↑ "SLFP & UNP sign MoU to form National Govt" . Sri Lanka Guardian . 21 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924102626/http://www.slguardian.org/slfp-unp-sign-mou-to-form-national-govt/ .
↑ ந.ஐ.தே.மு ஐதேகவின் சின்னத்திலும் கட்சியிலும் போட்டியிட்டது.
↑ 59.0 59.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ந.ஐ.தே.முயில் போட்டியிட்டது.
↑ 60.0 60.1 இதொகா பதுளை , கண்டி , கேகாலை மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
↑ பிரஜைகள் முன்னணி நுவரெலியா , வன்னி ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
↑ லிக கொழும்பு , காலி , குருநாகல் , மாத்தறை மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
↑ ததேகூ இதகயின் சின்னத்தில் போட்டியிட்டது.
↑ ததேமமு அஇதகா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
↑ "17-08-2015 - Official Election Results" (PDF) . Department of Elections, Sri Lanka.
↑ "UN chief congratulates new SL govt." . டெய்லிமிரர் . 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83953/un-chief-congratulates-new-sl-govt .
↑ "Ban Ki-moon congratulates new government" . தெ நேசன் . 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150820201317/http://nation.lk/online/2015/08/19/ban-ki-moon-congratulates-new-government/ .
↑ "Modi congratulates Ranil" . டெய்லிமிரர் . 18 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83917/modi-congratulates-ranil .
↑ "Modi congratulates Ranil" . தி ஐலண்டு . 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2018-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181111000053/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=130215 .