![]() | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 151 இடங்கள் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
இலங்கையின் 4வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 மார்ச் 19 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
1960 ஆம் ஆண்டளவில், இலங்கையின் ஆளும் மகாஜன எக்சத் பெரமுன (எம்ஈபி) கூட்டணி பிளவடையும் நிலையில் இருந்தது. கூட்டணியில் இருந்த சிறிய மார்க்சியக் கட்சிகள் நெற்காணிப் பிரச்சினையில் கூட்டணியில் பெரும் கட்சியாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்டு விலகின. இன்னும் ஒரு மார்க்சியக் கட்சியான விப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி புதிய கட்சி அமைத்து மகாஜன எக்சத் பெரமுன என்ற பெயரை எடுத்தது. இலங்கை சுதந்திரக் கட்சி முந்தைய ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் மறைவிற்குப் பின்னர் பிளவடைந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி இரண்டும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தேர்தலில் கொண்டிருந்தன. இந்தியத் தமிழர் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளைத் தந்தன. அத்துடன் சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்தவும் உறுதி பூண்டன.
டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நிலையான ஆட்சியை அமைக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. சூலை 1960 இல் மறு தேர்தல் இடம்பெற்றது.[1][2]
கட்சி | வேட்பாளர்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|---|
ஐக்கிய தேசியக் கட்சி | 127 | 909,043 | 29.89 | 50 | |
இலங்கை சுதந்திரக் கட்சி | 108 | 647,175 | 21.28 | 46 | |
இலங்கைத் தமிழரசுக் கட்சி | 19 | 176,444 | 5.80 | 15 | |
லங்கா சமசமாஜக் கட்சி | 101 | 325,286 | 10.70 | 10 | |
மகாஜன எக்சத் பெரமுன | 89 | 324,332 | 10.66 | 10 | |
இலங்கை சனநாயகக் கட்சி | 101 | 135,138 | 4.44 | 4 | |
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | 53 | 147,612 | 4.85 | 3 | |
தேசிய விடுதலை முன்னணி | 2 | 11,201 | 0.37 | 2 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 8 | 38,275 | 1.26 | 1 | |
சோசலிச மக்கள் முன்னணி | 40 | 23,253 | 0.76 | 1 | |
இலங்கை தேசிய முன்னணி | 1 | 11,115 | 0.37 | 1 | |
போதிசத்துவ பண்டாரநாயக்க முன்னணி | 1 | 9,749 | 0.32 | 1 | |
ஏனையோர் | 167 | 282,797 | 9.30 | 7 | |
செல்லுபடியான வாக்குகள் | 817 | 3,041,420 | 100.00 | 151 | |
நிராகரிகக்ப்பட்ட வாக்குகள் | |||||
பதிவான மொத்த வாக்காளர்கள் | |||||
மொத்த வாக்காளர்கள்1 | |||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 3,724,507 | ||||
Turnout | |||||
Source: Sri Lanka Statistics 1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர். |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help){{cite web}}
: Check date values in: |archive-date=
(help)