இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் அல்லது ஈழத் தமிழ் பேச்சு வழக்குகள் இலங்கையிலுள்ள தமிழ் பேசுவோரால் பேசப்படும் தமிழ்ப் பேச்சு வழக்குகள் ஆகும். தமிழ்நாடு மற்றும் இந்திய மாநிலங்களில் பேசப்படும் தமிழிலிருந்து வேறுபட்டும் காணப்படும். இதனையே புலம்பெயர் இலங்கைத் தமிழரும் பேசுகின்றனர். தமிழ் பேச்சு வழக்குகள் செந்தமிழிலிருந்து (கி.மு. 300 - கி.மு. 700) ஒலிவடுவ மாற்றம் மற்றும் ஒலி மாற்றம் கொண்டு காணப்படுகின்றன.
இது பொதுவாக ஐந்து உப பிரிவுகளாக வட, மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு தமிழ் பேச்சு வழக்குகள் என வகைப்படுத்தப்படும்.[1] இப்பேச்சு வழக்குகள் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர், வேடுவர் மற்றும் சிங்களவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவர்களில் இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லீம்கள், கரையோர வேடர், மலையகத் தமிழர் மற்றும் சில பறங்கியர்களுக்கு தமிழ் தாய் மொழியாக அமைய, மற்றவர்களில் சிலர் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் பேச்சு வழக்குப் பாவனையில் அவற்றிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தமிழ் ஒரு இரட்டை வழக்கு மொழியாகையால் எழுதும் முறையில் குறைந்தளவு வேறுபாடுகள் காணப்படுகையில், குறிப்பிடத்தக்களவு பேச்சு வழக்கு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கைப் பேச்சு வழக்குகள் தமிழ்நாட்டு பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டும் பொதுவான தன்மையினையும் கொண்டு காணப்படுகின்றன. இந்தியாவில் பாவனையில் இல்லாத பல சொற்களையும் இலக்கண வடிவங்களையும் இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் கொண்டுள்ளன.[2] அத்துடன் பல சொற்களை சிறிய மாற்றத்துடன் பயன்படுத்தப்படுகின்றன.[3] இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் கிராந்த மற்றும் மேற்கத்தைய மொழிகளில் தாக்கத்திலிருந்து சற்று குறைந்து காணப்படுகின்றன. ஆயினும் கிராந்த மற்றும் மேற்கத்தைய மொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் நாளாந்த பாவனையில் காணப்படுகின்றன. பொதுவில், இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள் கண்டத்திலுள்ள தமிழ் பேச்சு வழக்குகளைவிட அதிகம் மாறாதாக கருதப்படுகின்றது.[4]
நீர்கொழும்புத் தமிழ் என்பது சிங்களவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட சிங்கள பேச்சு வழக்கில் உருபுத் தொடரியல் அமைப்புக் கொண்ட நீர்கொழும்புபைச் சேர்ந்த இருமொழியுடைய மீனவர்களால் பயன்படுத்தப்படுகிறது.[5][6] இது சிங்கள மொழியின் தாக்கத்துடன் இலக்கண தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டது. இங்கு வழு வினைகள் தமிழ் வடிவத்தைவிட சிங்கள அமைப்பையே கொண்டுள்ளது.[5]
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர், இலங்கைச் சோனகர், போர்த்துக்கல் பரங்கியர், கரையோர வேடர்கள் ஆகியோரிடையே பேசப்படுகையில், திருகோணமலை பேச்சு வழக்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை ஒத்துக் காணப்படுகிறது.[7] கமில் சுவெலபில் என்ற மொழியியலாளரின் கருத்துப்படி மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், பேசப்படும் எல்லா தமிழ் வழக்குகளிலும் அதிகம் இலக்கியத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. இது சில பழைய பண்புகள் பாதுகாக்கின்றது. சில கவர்ச்சியூட்டும் மாறுதல்களை மேம்படுத்துகையில் தமிழின் ஏனைய வழக்குகளைவிட இது உண்மைத் தன்மையான இலக்கிய விதிமுறையைத் தக்க வைத்துள்ளது. அத்துடன் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் சில மிகவும் குறிப்பிட்ட சொற்களஞ்சிய பண்புகளைக் கொண்டு, அதன் ஒலியியல் தனிக்கூறு தொடர்பால் ஏனைய இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகளுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை தனக்கே உரித்தான சில சொற்களையும் கொண்டுள்ளது.[3][8]
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பழமையானதும் மிகப் பண்டையதும் புராதன தமிழுக்கு நெருக்கமானதுமாக கூறப்படுகிறது. இது தொல்காப்பிய கால புராதன தமிழின் பண்புகளைக் தக்க வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழ் சங்க இலக்கியங்களான திருக்குறள், குறுந்தொகை ஆகியவற்றில் பாவிக்கப்பட்ட பல வடிவங்களை தொடர்ந்து வைத்துள்ளது.[9] யாழ்த் தமிழ் இந்தியா தமிழுடன் பரஸ்பரமாக புரியக்கூடியவிதத்தில் இல்லை. ஆனாலும் அவை இரட்டைநடை வழக்கைப் பகிர்கின்றன.[10] இது இந்திய தமிழ் பேசுவோரால் மலையாளமென பலமுறை பிழையாக விளங்கிக் கொள்ளப்படுவதுமுண்டு.[11] யாழ்ப்பாணத் தமிழில் பிராகிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.[12] ஊர்காவற்துறை பறையர் சமூகம் இன்றும் முதல்நிலைத் திராவிட மொழிச் சொற்களைப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். இங்குள்ளதுபோல் ஏனைய தமிழ்ப் பேச்சு வழக்குகளில் பிராகிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுத்தப்படுவதில்லை. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழை பெரும்பான்மையாகப் பயன்படுத்துவது இலங்கைத் தமிழர்கள் ஆவர்.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)