இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணி (Sri Lanka women's national cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஐ.சி.சி பெண்கள் வாகையாளர் போட்டிகளில் போட்டியிடும் எட்டு அணிகளில் ஒன்றான இந்த அணியை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வாழ்நாள் உறுப்பினரான இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் நிர்வகிக்கிறது.
இலங்கை 1997 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது. பின்னர் அந்த ஆண்டில் 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றது. உலகக் கோப்பையின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்த அணி பங்கேற்றது, 2013 உலகக் கிண்ணத் தொடரில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.இலங்கை ஏப்ரல் 1998 இல் நடந்த முதல் மற்றும் ஒரே தேர்வு போட்டியில் பாக்கித்தானை தோற்கடித்தது.
ஆகஸ்ட் 8, 2018 அன்று, ஹர்ஷா டி சில்வா ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார். [8][9]