இலங்கை சட்டமா அதிபர் | |
---|---|
சட்டமா அதிபர் திணைக்களம் | |
பரிந்துரையாளர் | அரசுத்தலைவர் |
நியமிப்பவர் | அரசுத்தலைவர் நாடாளுமன்றப் பேரவையின் ஆமோதிப்பு |
பதவிக் காலம் | குறிப்பிட்ட கால எல்லை இல்லை |
உருவாக்கம் | பெப்ரவரி 19, 1801 |
முதலாமவர் | யேம்சு டங்கின் (இலங்கை நிதித்துறை வழக்கறிஞராக) |
துணை சட்டமா அதிபர் | இலங்கை மன்றாடியார் நாயகம் |
இணையதளம் | www |
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கையின் சட்டமா அதிபர் (Attorney General of Sri Lanka) என்பவர் இலங்கை அரசின் தலைமை சட்ட ஆலோசகரும், இலங்கை மீயுயர் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் முதன்மை வழக்கறிஞரும் ஆவார். இவரே சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர்ம் ஆவார். இப்பதவிக்குத் தகுந்தவரை ஆளும் கட்சியே நியமனம் செய்கிறது. இலங்கையின் தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆவார். இலங்கையின் அரசுத்தலைவருக்கு சட்டமா அதிபருக்கு ஆணைகள் வழங்க எந்த அதிகாரமும் இல்லை.
சட்டமா அதிபருக்கு செயலாட்சி அதிகாரம் எதுவும் இல்லை. இவ்வதிகாரம் நீதி அமைச்சருக்கே உள்ளது. சட்டமா அதிபருக்குத் துணை புரிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) மற்றும் கூடுதல் தலைமை வழக்குரைஞர் (Additional Solicitor Generals) பலர் உள்ளனர்.
# | சட்டமா அதிபர் | பதவியில் | பதவியில் இருந்து விலகல் |
---|---|---|---|
1 | பிரான்சிஸ் பிளெமிங்கு | 1884 | 1892 |
2 | சார்ல்சு சாமுவேல் கிரெனியர் | 1892 | 1892 |
3 | சார்ல்சு பீட்டர் லாயார்ட் | 1892 | 1902 |
4 | ஆல்பிரட் ஜோர்ஜ் லாசெலசு | 1902 | 1911 |
5 | அண்டன் பேட்ரம் | 1911 | 1918 |
6 | என்றி கோலன் | 1918 | 1925 |
7 | லான்சிலட் என்றி எல்பின்ஸ்டன் | 1925 | 1929 |
8 | எட்வர்ட் சென். ஜோன் ஜாக்சன் | 1929 | 1936 |
9 | ஜோன் வில்லியம் ரொனால்ட் இலங்கக்கூன் | 1936 | 1942 |
10 | மனிக்கு வதுமேஸ்திரி எண்ட்ரிக் டி சில்வா | 1942 | 1946 |
11 | செ. நாகலிங்கம் | 1946 | 1947 |
12 | எட்வர்ட் பெர்சிவல் ரோஸ் | 1947 | 1951 |
13 | ஏமா என்றி பஸ்நாயக்க | 1951 | 1956 |
14 | எட்வர்ட் பிரெட்ட்ரிக் நொயல் கிராட்டியன் | 1956 | 1957 |
15 | டக்லசு சென். கிளைவ் பட் ஜான்சி | 1957 | 1966 |
16 | அப்துல் கபூர் முகமது அமீர் | 1966 | 1972 |
17 | விக்டர் தென்னக்கூன் | 1972 | 1975 |
18 | சிவா பசுபதி | 1975 | 1988 |
19 | பண்டிகோரலலகே சுனில் சந்திரா டி சில்வா | 1988 | 1992 |
20 | திலக் ஜானக மாரப்பன | 1992 | 1995 |
21 | சிப்லி அசீஸ் | 1995 | 1996 |
22 | சரத் என். சில்வா | 1996 | 1999 |
23 | கே. சி. கமலசபேசன் | 1999 | 2007 |
24 | சி. ஆர். டி. சில்வா | 2007 | 2008 |
25 | மொகான் பீரிஸ் | 2008 | 2011 |
26 | சாந்தி ஈவா வனசுந்தர | 2011 | 2012 |
27 | பாலித பெர்னாண்டோ | 2012 |