உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட முக்கிய இடங்களில் ஒன்றாக இலங்கையின் சுற்றுச்சூழல் தனித்துவமுள்ளதாகக் காணப்படுகிறது.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் அந்தாட்டிக்காவை உள்ளடக்கிய தென் கோண்டுவானா மீப்பெரும் கண்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை இருந்தது. கோண்ட்வானா 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடையத் தொடங்கியது. இலங்கை அமைந்திருந்த தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பான இந்தியப் புவித்தட்டு, யூரேசிய புவித்தட்டுடன் மோதி இமயமலையை உருவாக்கியது.