ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின்போது சீர்திருத்தத் திருச்சபை இலங்கைக்கு அறிமுகமாகியது. இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது அங்கிலிக்க மற்றும் ஏனைய சீர்திருத்தத் திருச்சபை நற்செய்தி அறிவிப்பாளர்கள் 1ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடைந்தனர். ஏறக்குறை 160,518 பேர் (சனத்தொகையில் 0.8%) சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.
இரட்சணிய சேனை இலங்கையில் உறுதியாகவுள்ளது. இலங்கை லூத்தரன் சபை 1200 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் சீர்திருத்தத் திருச்சபையின் வருடாந்த வளர்ச்சி கிட்டத்தட்ட 3.9% ஆகும்.
சமயக் காரணங்களுக்காக கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை இடம்பெறுகிறது. 1980 களில் 43 வீத சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள் சிங்களவர்களாகவிருந்தனர்.[1]