இலதா இரைனிகாந்து | |
---|---|
பிறப்பு | இலதா அரங்காச்சாரி 3 மார்ச்சு 1958 திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | லதா ரஜினிகாந்த் |
பணி | தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி |
வாழ்க்கைத் துணை | ரஜினிகாந்த் (1981–தற்போது வரை) |
பிள்ளைகள் | ஐஸ்வர்யா செளந்தர்யா |
இலதா இரசினிகாந்து ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் இரசினிகாந்தின் மனைவியும் ஆவார்.[1] இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் தலைவராகவும், இவை தவிர் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆச்சேர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.[2]
இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்