இலாசுகரி பசார் | |
---|---|
தொல்லியல் தளம் | |
![]() லாசுகர் காவில் உள்ள இலாசுகர் பசாரின் கசனவித்து அரண்மனையின் இடிபாடுகள் (தெற்கு அரண்மனை, வடக்கே இருந்து பார்க்கப்படுகிறது).[1] | |
ஆள்கூறுகள்: 31°33′57″N 64°21′03″E / 31.565961°N 64.350822°E | |
நாடு | ![]() |
மாகாணம் | எல்மந்து |
இலாசுகரி பசார் (Lashkari Bazar) என்பது ஆப்கானித்தானில் இலாசுகர் காவில் அமைந்துள்ள கசனவித்து பேரரசின் ஆட்சியாளர்களின் அரண்மனை குடியிருப்பு ஆகும். அசல் பெயர் அநேகமாக அல்-அசுகர் என்பதாக இருக்கலாம்.[2]
தளத்தின் சில கட்டமைப்பு கூறுகள் பார்த்தியப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தவையாகக் குறிப்பிடுகிறது. [2] மைய அரண்மனை (32x52 மீட்டர்) சமனிட் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது ( பொ.ச.819-999 ).[2] 661 ஆம் ஆண்டிலேயே அரேபியர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. மேலும் பெரிய மற்றும் பணக்கார நகரமாக வளர்ந்தது.[3]
தென்பகுதியிலுள்ள மிகப் பெரிய அரண்மனை (170x100 மீட்டர்) கசினியின் மகுமூதுவால் (பொ.ச.998-1030) நிறுவப்பட்டது. மேலும் அவரது மகன் முதலாம் மசூத் (பொ.ச.1030-1041) மூலம் விரிவாக்கப்பட்டது.[2][4][5][3] இலாசுகரி பசாரில் உள்ள அரண்மனைகள் கசனவித்து ஆட்சியாளர்களின் குளிர்காலத் தங்குமிடமாக இருந்தன. அதன் தலைநகரம் கசினியில் இருந்தது.[3] தெற்கு அரண்மனைச் சுவரின் மேற்பரப்புப் பூச்சுகள், ஓவியங்கள், சுதை ஓவியங்கள், செதுக்கப்பட்ட பளிங்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.[2] சுமார் 100 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய சந்தைத் தெரு, அரண்மனை அமைப்புடன் இணைகிறது.[2]
வடக்கு அரண்மனை பிற்கால ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.[3][2]
பிற்கால குரித் வம்சத்தினர் பொ.ச.1151இல் அரண்மனைகளை சூறையாடினர். ஆனாலும் பின்னர் அவற்றை மீட்டெடுத்தனர். மேலும் கட்டிடக்கலையின் சில பகுதிகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.[3][2] அவர்கள் தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலா-இ-போஸ்ட் கோட்டையை கட்டிடக்கலை வளைவுடன் கட்டினார்கள்.
சமீபத்தில் இடிபாடுகள் தலிபான் வன்முறையில் இருந்து தப்பி ஓடிய ஆப்கானித்தான் அகதிகளால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.[6]