இலிசா ஜெனிபர் கியூவ்லி Lisa Jennifer Kewley | |
---|---|
பிறப்பு | 1974 (அகவை 50–51) கான்பெரா, ஆத்திரேலியத் தலைநகர்ப் பகுதி |
தேசியம் | ஆத்திரேலியர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | அடிலெய்டே பல்கலைக்கழகம் ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம் |
விருதுகள் | போக் பரிசு (1996) வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (2005) வானியலுக்கான நியூட்டன் இலேசி பரிசு (2008) ஆத்திரேலிய நிதி மீள்பார்வையும் வெசுட்டுபாக்கும் பெருந்தாக்கம் செலுத்திய 100 பெண்கள் (புத்தாக்கம்) (2014) |
இணையதளம் http://www.ifa.hawaii.edu/~kewley/ https://anu.academia.edu/LisaKewley |
இலிசா ஜெனிபர் கியூவ்லி (Lisa Jennifer Kewley) (பிறப்பு: 1974)ஆத்திரேலியத் தேசிய பல்கலைக்கழகக் கல்லூரி இயற்பியல், கணித அறிவியல் புலங்களின் வானியல், வானியற்பியல் ஆராய்ச்சிப் பள்ளியின் இணை இயக்குநராகவும் பேராசிரியராகவும் உள்ளார்.[1] இவர் பால்வெளி படிமலர்ச்சியில் சிறப்புப் புலமை பெற்று 2005 இல் ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார். இவ்விருது இவருக்கு பால்வெளிகளில் நிலவும் உயிரக வளிம ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இவர் 2008 இல் நியூட்டன் இலேசி பரிசைப் பெற்றார். இவர் 2014 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கியூவ்லி தென் ஆத்திரேலியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் அறிவியல் புல ஈடுபாட்டை ஊக்குவித்தனர். இவர் பள்ளி இயற்பியல் ஆசிரியரது தகமுற்று பள்ளி விண்மீன் நோட்டச் சுற்றுலாவில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது.[2] பள்ளிப் படிப்பு முடிந்ததும், இவர் அடிலெய்டே பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளவல் பட்டப் படிப்பில் சேர்ந்து வானியற்பியலில் இளவல் பட்ட்த்தைப் பெற்றார்.[3] பிறகு இவர் காபெரா சென்று ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் முனைவர் ஆய்வில் ஈடுபட்டு 2002 இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[4] இவர் 2001 இல் சிறிது காலம் அமெரிக்காவில் ஜான் ஆப்கின்சு பலகலைக்கழகத்தில் வருகைதரு அறிஞராகப் பணியாற்றினார்.[2] இப்போது இவர் வானியற்பியல் இதழில் (The Astrophysical Journal), " விண்மீன்வெடிப்பு பால்வெளிகளின் கோட்பாட்டு கணிதவியல் படிமம் (Theoretical Modeling of Starburst Galaxies)" பற்றிய ஆய்வுக் கட்டுரையை பிறரோடு இணைந்து வெளிடயிட்டார்.[5] இது 2016 வரை மிகவும் அடிக்கடி சான்றுகாட்டப்படும் கட்டுரையாகத் திகழ்கிறது.[6]
முனைவர் பட்டம் முடித்த்தும், இவர் போசுட்டனைல் உள்ள ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மைய CfA ஆய்வு நல்கை பெற்று அங்கு விண்மீன்களின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் குறித்து ஆய்வு செய்தார்.[3] இந்த ஆய்வில் இவரது வழிகாட்டிகளில் ஒருவராக மார்கரெட் கெல்லரும் இருந்தார்.[2] இவருக்கு 2004 இல் அபுள் முதுமுனைவர் பட்ட ஆய்வுநல்கையும் கிடைத்தது. பிறகு இவர் அவாயில் உள்ள அவாய்ப் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் 2005 இல் இருந்து பணியைத் தொடர்ந்தார். அபுள் தொலைநோக்கி நோக்கீட்டுப் படிமங்களை மீளாய்வு செய்து 9.3 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்த பால்வெளியை இனங்கண்ட குழுவில் கியூவ்லியும் இணைந்து பணியாற்றினார்.[7] பின்னர் இவர் மவுனா கீயில் உள்ள கெக் வான்காணகத்தில் இப்பால்வெளி உட்பட்ட பிற பல்வேறு காலகட்ட பால்வெளிகளின் உயிரக வளிம உள்ளடக்கத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தார். இந்த ஆய்வு பால்வெளிகளின் படிமலர்ச்சியைப் புரிந்துகள்ள உதவியது. இவர் இந்த ஆய்வுக்காக 2005 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[4] மேலும் இவரது பணியின் தகைமைக்காக 2008 இல் இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான நியூட்டன் இலேசி பரிசும் வழங்கப்பட்டார்.[8] இப்பரிசு இவருக்கு "பால்வெளிகளின் இயல்புகள் அவை எவ்வளவு காலத்துக்கு முன்பு தோன்றியன என்பதைப் பொறுத்து வேறுபடுதலைக் குறித்த ஆய்வுக்காக வழங்கப்பட்டது".[9] இவர் தன் ஆய்வில் பழைய, புதிய பால்வெளிகளின் இயல்புகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், உயிரகச் செறிவு, விண்மீன் ஆக்கவீதம், பால்வெளிக்கருவின் பான்மைகள் ஆகியன அடங்கும்.[9]
இவர் 2011 இல் ஆத்திரேலியாவுக்கு ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் வானியல், வானியற்பியல் துறையின் ஆராய்ச்சிப் பள்ளிப் பேராசிரியராகத் திரும்பினார்.[10]
இவர் 2014 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[11]
இவர் 2001 இல் கான்பெராவில் போசுட்டனுக்குச் செல்வதற்கு முன்பு உரூபனை மணந்தார்.[2] They have a son (born 2008) and a daughter (born 2011), both born when she was living and working in Hawai'i.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)