இலிண்டா சுபில்கர் Linda Spilker | |
---|---|
பிறப்பு | Linda Joyce Bies[1] 1955 (அகவை 61-62) |
வாழிடம் | அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கோள் அறிவியல் |
பணியிடங்கள் | தாரைச் செலுத்த ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம், புல்லர்ட்டன் (இளங்கலை), கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு (மூதறிவியல்), கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு (முனைவர்) |
ஆய்வேடு | கோள் வலயங்களின் அலைக் கட்டமைப்பு (1992) |
ஆய்வு நெறியாளர் | கிறித்தோபர் டி. இரசல் |
விருதுகள் | நாசா விதிவிலக்கான பணிப் பதக்கம் (2013) நாசா குழு சாதனை விருதுகள் (2011, 2009, 2000, 1998, 1982-1989) * நாசா அறிவியல் சாதனை விருது (1982) |
இலிண்டா சுபில்கர் (Linda Spilker) ஓர் அமெரிக்க வானியலாளரும் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளரும் ஆவார்.[2][3][4][5][6] இவரது ஆய்வு காரிக்கோள் வலயங்களின் தோற்றமும் படிமலர்ச்சியும் இயக்கவியலும் ஆகும்.[7]
இவர் புல்லர்ட்டனில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்ட்த்தை 1977 இல் பெற்றார். இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் 2983 இல் அறிவியல் முதுவர் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் 1992 இல் புவி இயற்பியலிலும் விண்வெளி இயற்பியலிலும் பெற்றார்.ரிவர் 1977 இல் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் முதலில் அதே ஆண்டில் ஏவப்பட்ட வாயேஜர் இலக்குத் திட்டத்தில் பணிசெய்தார்.[8] இவர் 1990 இல் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளர் ஆனார்.[2] ஐவர் 1997 இல் இத்திட்டச் சாதனைகளினை சுருக்கமாக விவரிக்கும் நாசாவின் வெளியீட்டின் பதிப்பாசிரியராக இருந்தார்.[9] இவர் 2010 முதல் காசினி இலக்குத் திட்ட அறிவியலாளராக முழு குழுவினரின் அறிவியல்ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகிறார்.[3][4][5][6][8]