மருத்துவத் தரவு | |
---|---|
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | X(US) |
சட்டத் தகுதிநிலை | OTC |
வழிகள் | Oral |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 5266-20-6 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 71587253 |
ChemSpider | 34994320 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C4 |
மூலக்கூற்று நிறை | 139.035 g/mol |
SMILES | eMolecules & PubChem |
|
இலித்தியம் ஆசுபார்டேட்டு (Lithium aspartate ) என்பது C4H6LiNO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். ஆசுபார்ட்டிக் அமிலமும் இலித்தியமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. சில மருத்துவச் சிகிச்சைகளுக்காக இதை சில சமயங்களில் சிறிய அளவுகளில் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் இலித்தியம் ஆசுபார்டேட்டின் பலாபலன், பாதுகாப்பு குறித்து எந்தவிதமான உறுதியளிக்கும் ஆதாரங்களும் கிடையாது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இலித்தியம் ஆசுபார்டேட்டை எந்தவிதமான மருத்துவத்திற்கும் பரிந்துரைக்கவில்லை. இச்சேர்மத்தின் மீதான ஆய்வுகள் இதைக்குறித்து வலுசேர்க்கவில்லை [1][2][3]. ஆசுபார்டேட்டு அமினோ அமிலமான என்-மெத்தில்-டி-ஆசுபார்ட்டிக் அமில ஏற்பிகளைத் தூண்டுகிறது [4].