இலித்தியம் இமைடு

இலித்தியம் இமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் இமைடு
இனங்காட்டிகள்
12135-01-2
பண்புகள்
Li2NH
வாய்ப்பாட்டு எடை 28.897 கி/மோல்
அடர்த்தி 1.48 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் இமைடு (Lithium imide) என்பது (Li2NH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் அமைடு மற்றும் இலித்தியம் ஐதரைடு ஆகிய சேர்மங்கள் இணைவதால் வெண்மை நிறமுடைய இச்சேர்மம் உருவாகிறது.[1]

LiNH2 + LiH → Li2NH + H2

இச்சேர்மம் ஒளியினால் பாதிக்கப்பட்டு விகிதச்சமமாதலின்றி பிரிந்து சிவப்பு நிறமான இலித்தியம் நைட்ரைடு தோன்றுகிறது.

2 Li2NH → LiNH2 + Li3N

எளிய முகமைய்ய கனசதுர படிக அமைப்புடன் Fm3m இடக்குழுவுடன் இலித்தியம் இமைடு காணப்படுகிறது. N-H பிணைப்புகளின் பிணைப்பு 0.82(6) Å நீளத்துடனும் H–N–H பிணைப்புகளின் பிணைப்புக் கோணம்109.5° ஆகவும் பெற்று இலித்தியம் அமைடின் படிக அமைப்பையே இதுவும் கொண்டுள்ளது.[2][3]

இலித்தியம் இமைடு ஒரு வலிமையான காரத்தன்மையுடன் கரிம மற்றும் கரிம உலோக வேதியியல் பிரிவுகளில் பலவாறு பயன்படுத்தப்படுகிறது. ஐதரசனை சேமிக்கக்கூடிய ஒரு பொருளாகவும் இது ஆராயப்பட்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ichikawa, Takayuki; Hanada, Nobuko; Isobe, Shigehito; Leng, Haiyan; Fujii, Hironobu (June 2004). "Mechanism of Novel Reaction from LiNH2 and LiH to Li2NH and H2 as a Promising Hydrogen Storage System". The Journal of Physical Chemistry B 108 (23): 7887–7892. doi:10.1021/jp049968y. 
  2. Ohoyama, Kenji; Nakamori, Yuko; Orimo, Shin-ichi; Yamada, Kazuyoshi (15 January 2005). "Revised Crystal Structure Model of Li2NH by Neutron Powder Diffraction". Journal of the Physical Society of Japan 74 (1): 483–487. doi:10.1143/JPSJ.74.483. 
  3. Noritake, T.; Nozaki, H.; Aoki, M.; Towata, S.; Kitahara, G.; Nakamori, Y.; Orimo, S. (May 2005). "Crystal structure and charge density analysis of Li2NH by synchrotron X-ray diffraction". Journal of Alloys and Compounds 393 (1-2): 264–268. doi:10.1016/j.jallcom.2004.09.063.