பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் இருபீனைல்பாசுபைடு | |
இனங்காட்டிகள் | |
4541-02-0 | |
ChemSpider | 2719164 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3478053 |
| |
பண்புகள் | |
C12H10LiP | |
வாய்ப்பாட்டு எடை | 192.13 g·mol−1 |
தோற்றம் | வெளிர் மஞ்சள் நிறத் திண்மம் |
கரைதிறன் | ஈதர்கள் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H312, H314, H332, H400, H410 | |
P260, P261, P264, P270, P271, P273, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் இருபீனைல்பாசுபைடு (Lithium diphenylphosphide) என்பது (C6H5)2PLiஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் இலித்தியமும் கரிமபாசுபரசு எதிர்மின் அயனியும் உட்கூறுகளாக உள்ளன. காற்று உணரியான இத்திண்மம் இருபீனைல்பாசுபீனோ சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. ஓர் ஈதர் அணைவுச் சேர்மமாக இது அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
குளோரோயிருபீனைல்பாசுபீன்,[1] குளோரோமுப்பீனைல்பாசுபீன்,[2][3] குளோரோநாற்பீனைல்பாசுபீன் போன்றவற்றுடன் கார உலோகங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலித்தியம், சோடியம், பொட்டாசியம் உப்புகள் உருவாகின்றன.
இருபீனைல்பாசுபீன்களை புரோட்டான் நீக்க வினைக்கு உட்படுத்தியும் இவற்றைத் தயாரிக்க முடியும்.
இருபீனைல்பாசுபைடு உப்புகளுடன் தண்ணீர் சேர்க்கும்போது நீராற்பகுப்பு வினை நிகழ்ந்து இருபீனைல்பாசுபீன் உருவாகிறது.
ஆல்கைல் ஆலைடுகளுடன் சேர்க்கப்பட்டால் இவை நான்கிணைய பாசுபீன்களைக் கொடுக்கின்றன.:[4]
இருபீனைல்பாசுபைடு உப்புகளுடன் உலோக ஆலைடுகளை சேர்க்கும் போது தாண்டல் உலோக பாசுபிட்டோ அணைவுச் சேர்மங்கள் கிடைக்கின்றன.
உப்புகளாக இவை கருதப்பட்டாலும் காரயிருபீனைல்பாசுபைடுகள் கரைசலில் அதிக அளவில் திரள்களாக உள்ளன. திண்மங்களாக இவை பல்லுருவக் கட்டமைப்புகளை ஏற்கின்றன.