| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
556-65-0 123333-85-7 84372-58-7 | |||
ChemSpider | 141057 13998125 | ||
EC number | 209-135-1 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image Image | ||
பப்கெம் | 23673451 16211966 129843620 | ||
| |||
பண்புகள் | |||
LiSCN | |||
வாய்ப்பாட்டு எடை | 65.02 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மையான நீருறிஞ்சும் திண்மம் | ||
அடர்த்தி | 1.44 கி/செ.மீ3[1] | ||
உருகுநிலை | 274 °C (525 °F; 547 K)[2] | ||
கொதிநிலை | 550 °C (1,022 °F; 823 K) (சிதைவடையும்) | ||
125 கி/100 மில்லி | |||
கரைதிறன் | ஆல்ககாலில் கரையும்[1] | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் (நீரிலி, α-ஒற்றைநீரேற்று, இருநீரேற்று) ஒற்றைச்சரிவச்சு (β-ஒற்றைநீரேற்று) | ||
புறவெளித் தொகுதி | C2/m (α-ஒற்றைநீரேற்று) Pnam (β-ஒற்றைநீரேற்று) Pnma (நீரிலி, இருநீரேற்று) | ||
Lattice constant | a = 1215.1 பைக்கோமீட்டர், b = 373.6 பைக்கோமீட்டர், c = 529.9 பைக்கோமீட்டர் (நீரிலி) | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
4 (α, β-ஒற்றைநீரேற்று) 6 (நீரிலி, இருநீரேற்று) | ||
மூலக்கூறு வடிவம் | |||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
5.0 கிலோகலோரி/மோல்[1] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
9 e.u.[1] | ||
தீங்குகள் | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் தையோசயனேட்டு, பொட்டாசியம் தயோசயனேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இலித்தியம் தயோசயனேட்டு (Lithium thiocyanate) என்பது LiSCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக அளவில் நீருறிஞ்சும் பொருளாக வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. ஒற்றை நீரேற்றாகவும் இருநீரேற்றாகவும் இலித்தியம் தயோசயனேட்டு உருவாகிறது. இலித்தியம் நேர்மின் அயனியின் பெரிய மின்னியல் சிதைக்கும் புலத்தின் காரணமாக இது கார உலோக சயனேட்டுகளில் மிகக் குறைவான நிலைப்புத்தன்மையை கொண்டுள்ளது[1]
இலித்தியம் தயோசயனேட்டு நீருறிஞ்சும் தன்மை கொண்டது. ஒற்றை நீரேற்று, இருநீரேற்று மற்றும் நீரிலியாக உருவாகிறது. இவை முறையே 274, 60 மற்றும் 38 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகின்றன.[2] ஒற்றைநீரேற்று உருகிய பின் மீக்குளிர்ச்சியடைகிறது, ஏனெனில் அது 36 °செல்சியசு வெப்பநிலையில் மறுபடிகமாக மீட்சியடைகிறது. இலித்தியம் தயோசயனேட்டு எத்தனால், மெத்தனால், 1-புரோபனால் மற்றும் அசிட்டோன் போன்ற பல கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. இருப்பினும், இது பென்சீனில் கரையாது.[1]
இலித்தியம் தயோசயனேட்டு நீருறிஞ்சும் தன்மை காரணமாக, இதன் நீரற்ற வடிவத்தை தயாரிப்பது கடினமாகும். பொதுவாக இலித்தியம் ஐதராக்சைடுடன் அமோனியம் தயோசயனேடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் தயோசயனேட்டு தயாரிக்கப்படுகிறது. பின்னர் வெற்றிடத்தில் நீரை நீக்கி இதன் விளைவாகக் கிடைக்கும் திடப்பொருளை டை எத்தில் ஈதரில் கரைத்து அதைத் தொடர்ந்து பெட்ரோலியம் ஈதருடன் சேர்த்து வினைப்படுத்தி ஈதர் உப்பு உருவாக்கப்படுகிறது. பின்னர் இது வெற்றிடத்தில் 110 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்பட்டு நீரற்ற உப்பு தயாரிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த வினை பின்வருமாறு எழுதப்படுகிறது:[1]
வினையில் ஈதருக்குப் பதிலாக டெட்ரா ஐதரோ பியூரானையும் பயன்படுத்தலாம்.
இலித்தியம் தயோசயனேட்டின் ஒற்றைநீரேற்று α வடிவம் மற்றும் β வடிவம் என இரண்டு வடிவங்களைக் கொண்டுள்ளது. α வடிவம் 49 °செல்சியசு வெப்பநிலையில் β வடிவத்திற்கு மாறுகிறது. α வடிவம் C2/m என்ற இடக்குழுவையும் β வடிவம் Pnam என்ற இடக்குழுவையும் கொண்டுள்ளன. இலித்தியம் தயோசயனேட்டு சேர்மத்தின் படிகவியல் பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன
சேர்மம் | LiSCN[3] | α-LiSCN·H2O[2] | β-LiSCN·H2O[2] | LiSCN·2H2O[3] |
---|---|---|---|---|
மோலார் நிறை (கி/மோல்) | 65.02 | 83.04 | 83.04 | 101.05 |
Crystal Structure | நேர்ச்சாய்சதுரம் | நேர்ச்சாய்சதுரம் | ஒற்றைச்சரிவச்சு | நேர்ச்சாய்சதுரம் |
Space Group | Pnma | C2/m | Pnam | Pnma |
அணிக்கோவை மாறிலி a (Å) | 12.151 | 15.027 | 13.226 | 5.721 |
அணிக்கோவை மாறிலி b (Å) | 3.736 | 7.597 | 7.062 | 8.093 |
அணிக்கோவை மாறிலி c (Å) | 5.299 | 6.707 | 8.166 | 9.66.9 |
β | 96.147° | |||
ஒருங்கிணைவு எண் | 6 | 4 | 4 | 6 |
கணக்கிடப்பட்ட அடர்த்தி (கி/செ.மீ3) | 1.80 | 1.45 | 1.45 | 1.50 |