பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலித்தியம் சைக்ளோபெண்டாடையீனிலைடு, வளையபெண்டாடையீனைல் இலித்தியம்,
| |
இனங்காட்டிகள் | |
16733-97-4 | |
பப்கெம் | 24858115 |
பண்புகள் | |
C5H5Li | |
வாய்ப்பாட்டு எடை | 72.04 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 1.064 கி/செ.மீ3 |
சிதைவடையும் | |
கரைதிறன் | டெட்ரா ஐதரோபியூரான், டைமெத்தாக்சியீத்தேன் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றி எரியும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் வளையபெண்டாடையீனைடு (Lithium cyclopentadienide) C5H5Li. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கரிம இலித்தியம் சேர்மமான இது நிறமற்று திண்ம நிலையில் காணப்படுகிறது. கலந்துள்ள ஆக்சிசனேற்ற மாசுக்கள் காரணமாக சில மாதிரி உப்புகள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கின்றன. இலித்தியம் நேர்மின் அயனியுடன் வளையபெண்டாடையீனைடு எதிர்மின் அயனி சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
வர்த்தக ரீதியாக இலித்தியம் வளையபெண்டாடையீனைடு டெட்ரா ஐதரோ பியூரோனிலுள்ள கரைசலாக விற்பனைக்கு கிடைக்கிறது. வளையபெண்டாடையீனை பியூட்டைல் இலித்தியத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் இலித்தியம் வளையபெண்டாடையீனைடு தயாரிக்க முடியும். :[1]
கரைசலற்ற படிகநிலை இலித்தியம் வளையபெண்டாடையீனைடு அரிதாகவே தோன்றுகிறது. μ-η5:η5-C5H5 ஈந்தணைவிகளுக்கு இடையில் ஒன்று விட்டு ஒன்று அமைப்பில் முடிவற்ற சங்கிலியாக இலித்தியம் மையங்கள் கொண்ட இடையீட்டுச் சேர்மமாக இப்படிகங்கள் கருதப்படுகின்றன. [2] அமீன்கள் அல்லது ஈதர்கள் முன்னிலையில் வினைபுரிந்து இச்சேர்மம் கூட்டு விளைபொருள்களைக் கொடுக்கிறது. (η5-Cp)Li(TMEDA) என்ற கூட்டு விளைபொருள் இதற்கு உதாரணமாகும். [1] வளையபெண்டாடையீனைல் ஒருங்கிணைவுச் சேர்மங்கள் தயாரிப்பில் இலித்தியம் வளையபெண்டாடையீனைடு ஒரு பொதுவான வினையாக்கியாகப் பயன்படுகிறது.