இலியோ பிராங் கார்பெட் (Leo Frank Corbet) என்பவர் ஓர் அமெரிக்க வழங்கறிஞரும் அரசியல்வாதியுமாவார். 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 அன்று நியூமெக்சிகோவின் இலார்ட்சுபர்க்கு நகரில் இலியோ பிறந்தார். அரிசோனா மாநிலத்திலுள்ள யூமா மாகாணத்தின் யூமா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அரிசோனா பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும் சட்டம் படித்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றார்.
அரிசோனா மாநிலத்தின் தலைநகரமான பீனிக்சில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். குடியரசுக் கட்சிக்காரரான கார்பெட் 1971 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்க செனட்டு எனப்படும் ஆட்சிக்குழுவில் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சையை கார்பெட் மேற்கொண்டார். இதன் பின்னர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் வாழ்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு அரிசோனாவின் பீனிக்சு நகரில் டிசம்பர் மாதம் 22 அன்று இறந்தார். [1][2]