இலேபியோ அங்ரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | இலேபியோ
|
இனம்: | இ. அங்ரா
|
இருசொற் பெயரீடு | |
இலேபியோ அங்ரா |
இலேபியோ அங்ரா (Labeo angra) என்பது சைப்ரினிடே குடும்பத்தினைச் சார்ந்த கெண்டை மீன் வகைகளுள் ஒன்றாகும். இம்மீன் பொதுவாக அங்ரா இலேபியோ என்று அழைக்கப்படுகிறது.[2] ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இச்சிற்றினம் வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் பாக்கித்தான் நாடுகளில் காணப்படுகிறது. இச்சிற்றினம் ஆப்கானித்தானில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [3]
இந்த மீன் அதிகபட்சமாக 22 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.[3] தாவர உண்ணி மீனான இலேபியா அங்ரா ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நன்னீர் வாழ்விட வகைகளில் காணப்படுகிறது.[2]
இந்த மீன் இனம் உணவு மற்றும் விளையாட்டு மீனாக வணிக முக்கியத்துவம் வாய்ந்தது.[3] கிழக்கு வங்காளதேசத்தின் கேக்கலுகி ஹோர் ஈரநிலங்களில் அரிதான மீனாக உள்ளது.[2] நேபாளத்தின் தினாவு ஆற்றில் கட்டப்பட்ட அணை ஒன்றினால் இம்மீனின் இனபெருக்க வலசைப்போதல் செயலானது பாதிக்கப்பட்டது.[4] ஆனால் பொதுவாக இம்மீன்கள் காணப்படுவதால் இச்செயலானது அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை.