இலேபியோ போர்செலசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | இலேபியோ
|
இனம்: | இ. போர்செலசு
|
இருசொற் பெயரீடு | |
இலேபியோ போர்செலசு (கெக்கல், 1844)[2] |
இலேபியோ போர்செலசு (Labeo porcellus) என்பது சைப்ரினிடே குடும்பத்தில் உள்ள சிற்றினங்களுள் ஒன்றாகும். கெண்டை மீன் வகைகளுள் ஒன்றான இது பொதுவாகப் பம்பாய் லேபியோ எனப்படும்.[3] இச்சிற்றினம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது .[2]
இந்த சிற்றின மீனின் உடல் நீளமானது சுமார் 20[2] முதல் 30 [3] சென்டிமீட்டர் வரை இருக்கும். இம்மீன்கள் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் வசிக்கும் நன்னீர் மீன் வகையைச் சார்ந்தது.
ஒப்பீட்டளவில் பரந்த காணப்பட்டாலும், இந்த இனம் இதன் வரம்பின் சில பகுதிகளில் அரிதானவையாகவும் 10க்கும் குறைவான இடங்களில் இருந்து மட்டுமே அறியப்படுகிறது. இதனுடைய எண்ணிக்கை குறைந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால் அச்சுறுத்தும் இனமாகப் பட்டியலிட போதுமான தரவு இல்லை. இதனுடைய எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களாக கருதப்படுபவை: அதிக அளவில் மீன் பிடித்தல், சூழல் மாசு, மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட கெண்டை மீன் இனங்களின் தாக்கங்கள் ஆகும்[3]