![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 8 கடலூர், தமிழ்நாடு, இந்தியா | (வயது 26)|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி | குளோபல் மிசன் பன்னாட்டுப் பள்ளி, அகமதாபாது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 164 சென்டிமீட்டர்கள் (5.38 அடி) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 54 கிலோகிராம்கள் (119 lb) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | சுடுதல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 10 மீ காற்றுத் துவக்கு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இளவேனில் வாலறிவன் (Elavenil Valarivan, பிறப்பு: ஆகத்து 2, 1999) தமிழ்நாடு, கடலூரைச் சேர்ந்த குறி பார்த்துச் சுடும் வீராங்கனை ஆவார். இவர் 2019 பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பின் 2019 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார்.[1]
இளவேனில் 2018 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இளையோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்றார். 2019 உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பின்னர் 2019 இல் இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.[2][3][4] 2019 ஆகத்து 28 இல் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.[1][5]
இளவேனில் மியூனிக்கில் நடந்த 2019 உலகக்கோப்பைப் போட்டியில் 10 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபற்றி நான்காவதாக வந்தார்.[6][7] இவருக்கு 2022 இல் இந்திய அரசின் அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.[8]