![]() இளைய மெம்னோன் சிற்பம் (இரண்டாம் ராமேசஸ்), ராமேசியம் | |
செய்பொருள் | கருங்கல் |
---|---|
அளவு | உயரம்:267 cm (105 அங்) அகலம்:203 cm (80 அங்) |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 1270 |
காலம்/பண்பாடு | எகிப்தின் 19-ஆம் வம்சம் |
இடம் | ராமேசியம் வாசல் |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம் அறை எண் 4 இலண்டன் |
அடையாளம் | EA 19 |
இளைய மெம்னோன் சிற்பம் (Younger Memnon) பண்டைய எகிப்தின் தெற்கில் அமைந்த தீபை நகரத்தின் ராமேசியம் கட்டிடத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கருங்கல் சிற்பங்கள் ஆகும். இதன் காலம் ஏறத்தாழ கிமு 1270 ஆகும். இது எகிப்தின் 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசசின் உடைந்த சிற்பப் பகுதி ஆகும்.
ராமேசியத்தில் நிறுவப்பட்ட ஒரே கருங்கல்லில் நிறுவப்பட்ட இரண்டு இளைய மெம்னோன் சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். இச்சிற்பம் 2.7 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் (இரு தோள்களுக்கு இடையே), 7.25 டன் எடையும் கொண்டது. இதில் ஒரு சிற்பம் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1][2]மற்றொரு சிற்பம் எகிப்தின் ரமேசியத்தில் உள்ளது.