இஷ்க் (Ishq) | |
---|---|
இயக்கம் | அனுரஜ் மனோகர் |
கதை | ரதேஷ் ரவி |
நடிப்பு | |
வெளியீடு | மே 17, 2019(கேரளம்) |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
இஷ்க் (Ishq) இது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளம் மொழி திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் அனுரஜ் மனோகர், கதை ரதேஷ் ரவி என்பவராகும். சைன் நிகாம், ஆனா சீதல் ஆகியோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
கொச்சியைச் சேர்ந்த இளைஞரான சச்சி (ஷேன் நிகாம்) மற்றும் அவரது காதலி வசுதா (ஆன் ஷீட்டல்) ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய திரைக்கதையாகும்.
ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் சச்சி தனது சகோதரியின் திருமணத்திற்கு விடுப்பில் உள்ளார். தனது விடுமுறையின் போது தனது பிறந்தநாளில் தனது காதலிக்கு பரிசு கொடுக்க நினைத்து காரில் தனியாகச் சென்று பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த இருவர் தங்களைக் காவலர்கள் எனச் சொல்லி சச்சியையும், வசுதாவையும் மனரீதியாக சித்திரவதை செய்யகிறார்கள். மேலும் சச்சியை வெளியில் நிற்கவைத்துவிட்டு அவனின் காதலியிடம் ஏதோ பேசுகிறான். இப்போது சச்சி சந்தேகப்படுகிறான். பல சித்திரவதைக்குப்பின்னர் இருவரையும் விட்டுவிடுகிறார்கள். இருவரும் அவளின் கல்லூரி விடுதிவரை அமைதியாக வருகிறார்கள். காரிலிருந்து இறங்கிய அவளிடம் இவன் அவன் உன்னைக் காருக்குள் வைத்து என்ன செய்தான என்று கேட்கிறான். அதற்கு அவள் கோபமாக சென்றுவிடுகிறாள்.
இந்த சம்பவத்திற்காக தன்னையும் தன் காதலியையும் சித்திரவதை செய்தவனைப் பலிவாங்க நினைக்கிறான் சச்சி. அபோதுதான் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஒருவர் தையல்காரர் என்று தெரிந்துகொள்கிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் வீட்டிற்குச் சென்று அவரின் மனைவி மகள் ஆசியோரை சித்திரவதை செய்ய நினைக்கிறான். அது முடியாமல் போக கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரே வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் இரண்டு காலையும் ஒடித்து அவன் கீழே விழுந்துகிடக்கும்போது எப்படி தன் காதலியை சித்திரவதை செய்தாரோ அப்படியே சித்திரவதை செய்கிறான். மேலும் அவனின் உண்மை முகத்தை அவனின் மனைவிக்கு சொல்லுகிறான்.
அடுத்த நாள் தன் காதலியைப்பார்க்க கல்லூரி விடுதிக்குச் சென்று அவளை அழைக்கிறான் சச்சி. அவளும் வருகிறாள். அவன் காரில் வைத்து அவளுக்கு மோதிரம் போட விழைகிறான். அவனை திருமணம் செய்ய சம்மதித்தாளா? இல்லையா என்பதே கதை.