இஸ்தாம்பின் (P196) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Stampin (P196) Federal Constituency in Sarawak | |
![]() இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி (P196 Stampin) | |
மாவட்டம் | கூச்சிங் மாவட்டம் |
வட்டாரம் | கூச்சிங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 121,009 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங்; படுங்கான்; பென்டிங்; பத்து லிந்தாங் |
பரப்பளவு | 194 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1996 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சோங் சியெங் ஜென் (Chong Chieng Jen) |
மக்கள் தொகை | 212,217 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1999 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Stampin; ஆங்கிலம்: Stampin Federal Constituency; சீனம்: 实淡宾国会议席) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P196) ஆகும்.[5]
இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி 1996-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1999-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1999-ஆம் ஆண்டில் இருந்து இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கூச்சிங் பிரிவு என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். முன்பு முதல் பிரிவு (First Division) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் நவீன சரவாக்கின் மையம் மற்றும் தொடக்கப் புள்ளியாகும். கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும்.
கூச்சிங் பிரிவின் இன அமைப்பை, சரவாக் முழுமைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சற்றே வேறுபட்டது. மலாய்க்காரர்களும் மற்றும் சீனர்களும் கூச்சிங் நகரில் பெரும்பான்மையான இனக் குழுக்களாக உள்ளனர்.
கூச்சிங் பிரிவு, சரவாக் மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட பிரிவு ஆகும். அந்த வகையில் கூச்சிங் பிரிவில் வசிக்கும் பெரும்பாலானோர் கூச்சிங் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
இஸ்தாம்பின் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
இஸ்தாம்பின் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
இஸ்தாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1999 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
இஸ்தாம்பின் தொகுதி 1996-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
10-ஆவது மக்களவை | P170 | 1999-2004 | யோங் குன் செங் (Yong Khoon Seng) |
பாரிசான் நேசனல் (சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)]] |
11-ஆவது மக்களவை | P196 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | ஜூலியன் டான் கோக் பிங் (Julian Tan Kok Ping) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜசெக) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | சோங் சியெங் ஜென் (Chong Chieng Jen) |
பாக்காத்தான் அரப்பான் (ஜசெக) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சோங் சியெங் ஜென் (Chong Chieng Jen) | ஜனநாயக செயல் கட்சி (DAP) | 39,310 | 53.30 | 10.40 ▼ | |
லோ கெர் சியாங் (Lo Khere Chiang) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 32,152 | 43.59 | 43.59 ![]() | |
லூ செங் கிங் (Lue Cheng Hing) | சரவாக் ஐக்கிய கட்சி (PSB) | 2,291 | 3.11 | 3.11 ![]() | |
மொத்தம் | 73,753 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 73,753 | 98.93 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 794 | 1.07 | |||
மொத்த வாக்குகள் | 74,547 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,21,009 | 60.95 | 18.38 ▼ | ||
Majority | 7,158 | 9.71 | 17.69 ▼ | ||
ஜனநாயக செயல் கட்சி கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)