ஈ.ம.யா Ee.Ma.Yau | |
---|---|
இயக்கம் | லிஜோ ஜோஸ் பெல்லிசேரி |
தயாரிப்பு | ஆஷிக் அபு ராஜேஷ் ஜார்ஜ் குலங்காரா ரானி ஜோசப் சோனு சிங் |
கதை | பி.எஃப்.மாத்யூ |
இசை | பிரசாந்த் பிள்ளை |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஷைஜா காலித் |
படத்தொகுப்பு | தீபு ஜோசப் |
கலையகம் | ஓபிஎம் சினிமாஸ் ஆர்ஜிமே சினிமாஸ் |
விநியோகம் | ஓபிஎம் சினிமா ரிலீஸ் |
வெளியீடு | 4 மே 2018 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஈ.ம.யா (Ee.Ma.Yau) (ஈ.ம.யா என்பதன் விரிவு ஈசோ மரியம் யா(அ)வுசேப்பு - RIP என்பதன் மலையாளக் கிறித்துவச் சொல் ) என்பது 2018 ஆண்டைய இந்திய மலையாள அங்கதத் திரைப்படம் ஆகும். பி.எஃப்.மாத்யூ எழுத, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார்.[1][2] இப்படத்தில் விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், பாலி வால்சன், பிட்டோ டேவிஸ், கயனகரி தங்காராஜ் மற்றும் திலீஷ் பொத்தன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3][4] இந்த திரைப்படத்தின் சிறப்புக்காட்சி 2017 நவம்பர் 30, அன்று காட்டப்பட்டது. படமானது 2018 மே 4 அன்று வெளியானது.[5] இப்படமானது கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் சேலனாமில் உள்ள ஒரு லத்தீன் கத்தோலிக்க சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மூத்த மனிதனின் மரணத்தையும், அவரின் இறுதிச் சடங்கை சுற்றியே நிகழ்வுகளைக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 48வது கேரள மாநில 48வது திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருது உள்ளிட்ட 3 விருதுகளை பெற்றது.[6]
அவ்வப்போது வீட்டைவிட்டுச் சென்றுவிடும் வாவச்சன் என்ற ஒரு குடும்பத் தலைவர், வீடு திரும்புகிறார். அவர் வீடு திரும்பியதால் வீடு குதூகலம் அடைகிறது. மகன் தந்தைக்கு மதுவை வாங்கி வருகிறான் வீடு ஆட்டமும் பாட்டமும் செல்லச் சண்டைகளையும் நள்ளிரவுவரை சந்திக்கிறது. இந்நிலையில் தந்தை சுருண்டு விழுந்து இறந்துவிடுகிறார். கலகலப்பாக இருந்த வீடு, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இழவு வீடாக மாறுகிறது. அக்கம் பக்கம், சொந்தபந்தம், பகைவர்கள், நண்பர்கள் என எல்லோரும் சாவுக்கு கூடுகிறார்கள். சிலர் இது கொலையாக இருக்க வேண்டும் என கருதுகின்றனர். இந்த சாதாரண மனிதனின் மரணத்தில், சமயம், காவல் துறை போன்ற அமைப்புகளும் தனி மனித அபிப்ராயங்களும் நிகழ்த்தும் குறுக்கீடுகளைப் படம் அங்கதச் சுவையுடன் சொல்கிறது.