ஈசா கான் நியாசி | |
---|---|
பிறப்பு | ஈசா கான் நியாசி 1453 தில்லி சுல்தானகம் |
இறப்பு | 1548 (அகவை 94–95) தில்லி, சூர் பேரரசு |
பிள்ளைகள் | 8 |
ஈசா கான் நியாசி (Isa Khan Niazi) முகலாயப் பேரரசுடன் போரிட்ட சூர் வம்சத்தைச் சேர்ந்த சேர் சா சூரி மற்றும் அவரது மகன் இஸ்லாம் ஷா சூரி ஆகியோரின் அரசவையில் இருந்த ஓர் ஆப்கானியப் பிரபு ஆவார்.
ஈசா கான் நியாசி, கி.பி.1453 இல் பிறந்த இவர் 1548 இல் தனது 95 வயதில் தில்லியில் இறந்தார். 1451 லிருந்து 1525 வரை லௌதி வம்சத்தினர் இந்தியத் துணைக்கண்டத்தில் ( இந்துஸ்தான் ) முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நேரம் அது. இசா கான் நியாசி ஆளும் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். இப்ராகிம் லௌதி, சேர் சா சூரி போன்ற பிரபுக்களின் அதே பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர் . இந்த குடும்பங்களில் பெரும்பாலானவை தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டன.
ஈசா கானின் கல்லறை அவர் வாழ்ந்த காலத்திலேயே (கி.பி. 1547-48) கட்டப்பட்டது. இது தில்லியில் முகலாய பேரரசர் உமாயூனின் கல்லறை வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கல்லறை கி.பி 1562 மற்றும் 1571 க்கு இடையில் கட்டப்பட்டது. இந்த எண்கோண கல்லறையானது விதானங்கள், மெருகூட்டப்பட்ட ஓடுகள் மற்றும் திரைகள் மற்றும் தூண்களால் ஆதரிக்கப்படும் ஆழமான வராண்டா போன்ற வடிவங்களில் தனித்துவமான அலங்காரத்தைக் கொண்டுள்ளது. இது வளாகத்தின் நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பு ஹலிமா தோட்டத்தின் தெற்கே ஒரு சிவப்பு மணற்கல் பலகையில் உள்ள கல்வெட்டு, இந்தக் கல்லறை இஸ்லாம் ஷாவின் மகன் மசுனத் அலி ஈசா கானின் கல்லறை என்று குறிப்பிடுகிறது [1] 5 ஆகஸ்ட் 2011 அன்று, இந்தக் கல்லறையின் மறுசீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. ஈசா கானின் தோட்டக் கல்லறை, கல்லறையுடன் இணைக்கப்பட்ட தோட்டத்தின் ஆரம்பகால உதாரணமாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தாக்கம் பின்னர் அக்பரின் கல்லறையிலும் தாஜ்மஹாலிலும் உருவாக்கப்பட்டது. [2]
வளாகத்தின் விளிம்பில், கல்லறைக்கு குறுக்கே, குறிப்பிடத்தக்க மிஹ்ராப்களுடன் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இது ஈசா கானின் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லறைக் கட்டப்பட்ட அதே நேரத்தில் கட்டப்பட்டது.[3]
ஈசா கான், பஷ்தூன் பழங்குடியினரான நியாசிப் பிரிவைச் சேர்ந்தவர். இவரது சந்ததியினர் இன்றும் ஆப்கானித்தானின் பாக்டியா மாகாணத்திலுள்ள கிலா நியாசியிலும், பாக்கித்தானின் மியான்வாலியிலும் வாழ்ந்து வருகின்றனர். [4] [5] நகராட்சி 1875 இல் உருவாக்கப்பட்டது. பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நியாசி பழங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்