ஈப்போ மாநகராட்சி Ipoh City Council Majlis Bandaraya Ipoh | |
---|---|
![]() | |
![]() Flag of Ipoh City Council | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் of ஈப்போ |
வரலாறு | |
முன்பு | ஈப்போ நகராட்சி மன்றம் |
தலைமை | |
நகர முதல்வர் | |
செயலாளர் | முகமட் சக்குவான் சக்காரியா Hakim Ariff Md Noor 1 ஏப்ரல் 2020 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
![]() | |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:: பாரிசான் நேசனல் (12) |
ஆட்சிக்காலம் | 1 மே 2021 - 30 ஏப்ரல் 2023 |
கூடும் இடம் | |
![]() | |
ஈப்போ மாநகராட்சி தலைமையகம் MBI Building Jalan Sultan Abdul Jalil, Greentown, 30450 Ipoh, Perak, Malaysia 4°35′55″N 101°05′24″E / 4.59866°N 101.08992°E | |
வலைத்தளம் | |
mbi | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
ஈப்போ மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Ipoh; ஆங்கிலம்: Ipoh City Council); (சுருக்கம்: MBI) என்பது மலேசியா, பேராக், மாநிலத்தில் ஈப்போ மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் பேராக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி உள்ளது.
கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஈப்போ மாநகராட்சியின் அதிகார வரம்பு 643 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த நகராட்சிக்கு 1988 மே 27-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஈப்போ மாநகராட்சி என அழைக்கப்பட்டது.
ஈப்போ மாநகராட்சியின் முதல்வர் (மேயர்); மற்றும் அதன் 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் பேராக் மாநில அரசாங்கம் ஓராண்டு காலத்திற்கு நியமிக்கிறது. மேற்சொன்ன ஈப்போ மாநகராட்சியின் பொறுப்புகள் அனைத்தும் நியமனப் பொறுப்புகளாகும்.
மலேசியாவில் உள்ள மற்ற மாநகராட்சிகளைப் போலவே இந்த ஈப்போ மாநகராட்சியும் நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; ஈப்போ நகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு; பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.[2]
ஈப்போ மாநகராட்சி 1893-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுகாதார வாரியமாக (Sanitary Board) தன் வரலாற்றைத் தொடங்கியது. அதன் படிப்படியான வளர்ச்சியில் இருந்து, 1962-ஆம் ஆண்டில் நகராட்சி (Municipal Status) தகுதியைப் பெற்றது. இருப்பினும் 16 ஆண்டுகள் கழித்து, 1988 மே 27-ஆம் தேதி தான், ஈப்போ ஒரு நகரமாக அறிவிக்கப்பட்டது.
ஈப்போ மாநகராட்சி என்பது உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா); (Local Government Act 1976 (Act 171); எனும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவன அமைப்பாகும் (Corporate Body). நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் சட்டம் 1976 (சட்டம் 172)-இன் கீழ் (Town and Country Planning Act 1976 (Act 172) ஈப்போ நகரத்தை நிர்வாகம் செய்வது ஈப்போ மாநகராட்சியின் பொறுப்பாகும்.
தற்போது, ஈப்போ மாநகராட்சியின் மக்கள்தொகை 720,000. பேராக் மாநிலத் தலைநகரமான ஈப்போவின் நிர்வாகம், வர்த்தகம், விளையாட்டு, நிதி, அரசியல், மதம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மையமாக இந்த மாநகராட்சி செயல்படுகிறது.
இப்போதைய காலத்தில், மாநகராட்சி முதல்வரின் தலைமையில், ஈப்போ மாநகரத்தை ஓர் ஆற்றல்மிக்க நகரமாகவும் மற்றும் சிறப்புமிக்க நகரமாகவும் மாற்றும் முயற்சியில் ஈப்போ மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
எண் | முதல்வர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | உமார் அபு | 27 மே 1988 | 31 மே 1993 |
2 | இசுமாயில் சா போடின் | 1 சூன் 1993 | 31 டிசம்பர் 1994 |
3 | அகமத் சலே சரிப் | 2 சனவரி 1995 | 31 டிசம்பர் 1997 |
4 | தலாத் உசைன் | 1 பிப்ரவரி 1998 | 2 டிசம்பர் 2002 |
5 | சிராசுதீன் சாலே | 3 டிசம்பர் 2002 | 15 ஏப்ரல் 2004 |
6 | அசன் நவவி அப்துல் ரகுமான் | 1 மே 2004 | 23 சூலை 2006 |
7 | முகமது ரபியாய் மொக்தார் | 24 சூலை 2006 | 5 ஜூன் 2008 |
8 | ரோசிடி அசிம் | 23 சூலை 2008 | 2 சனவரி 2014 |
9 | அருன் ராவி | 2 சனவரி 2014 | 30 சூன் 2015 |
10 | சம்ரி மேன் | 1 சூலை 2015 | 1 சூலை 2019 |
11 | அகமத் சுவைதி | 1 சூலை 2019 | 31 மார்ச் 2020 |
12 | ருமாயிசி பகரின் | 1 ஏப்ரல் 2020 | பதவியில் |