![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13637-76-8 | |
ChemSpider | 55560 |
EC number | 237-125-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61655 |
| |
UN number | 1470 |
பண்புகள் | |
Pb(ClO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 406.10 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 2.6 கி/செ.மீ3 |
கொதிநிலை | 250 °C (482 °F; 523 K) (சிதையும்) |
256.2 கி/100 மி.லி (25 °செல்சியசு) | |
ஆவியமுக்கம் | 0.36 டார் (முந்நீரேற்று) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | பாதரச(II) பெர்குளோரேட்டு; வெள்ளீய(II) பெர்குளோரேட்டு; காட்மியம் பெர்குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈய(II) பெர்குளோரேட்டு (Lead(II) perchlorate) Pb(ClO4)2·xH2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். வாய்ப்பாட்டிலுள்ள x இன் மதிப்பு 0,1 அல்லது 3 என மாறுபடும். வெண்மை நிறத்தில் காணப்படும் இச் சேர்மம் அதிக அளவில் நீருறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் தண்ணீரில் நன்கு கரையக்கூடியதாகவும் உள்ளது.[1]
ஈய(II) ஆக்சைடு, ஈயக் கார்பனேட்டு, அல்லது காரீய(II) நைட்ரேட்டு ஆகியவற்றுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈய பெர்குளோரேட்டு முந்நீரேற்று உருவாகிறது.
. அதிகப்படியான பெர்குளோரிக் அமிலம் முதலில் கரைசலை 125 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி, பின்னர் 160 °செல்சியசு வெப்பநிலைக்கு ஈரமான காற்றின் கீழ் சூடாக்கி, அமிலத்தை இருநீரேற்றாக மாற்றுவதன் மூலம் அதிகப்படியான பெர்குளோரிக் அமிலத்தை அகற்றலாம். ஈய பெர்குளோரேட்டு முந்நீரேற்றை நீரற்ற சூழலில் பாசுபரசு பெண்டாக்சைடுடன் சேர்த்து 120 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி நீரற்ற Pb(ClO4)2 உப்பை தயாரிக்கலாம். முந்நீரேற்று 83 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். நீரற்ற உப்பு 250 ° செல்சியசு வெப்பநிலையில் ஈயம்(II) குளோரைடு மற்றும் ஈயம்(II) ஆக்சைடாக சிதைகிறது. முந்நீரேற்றை பகுதியளவு நீர் நீக்கம் செய்து ஒற்றைநீரேற்றை தயாரிக்க முடியும். இந்த ஒற்றை நீரேற்று 103 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. [2]
மெத்தனாலில் உள்ள நீரற்ற ஈயம்(II) பெர்குளோரேட்டின் கரைசல் வெடிக்கும் தன்மை கொண்டது.