பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈயம்(IV) குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13463-30-4 | |
பண்புகள் | |
PbCl4 | |
வாய்ப்பாட்டு எடை | 349.012 கி/மோல்[1] |
தோற்றம் | மஞ்சள் நிற நீர்மம்[2] |
அடர்த்தி | 3.2 கி⋅.செ.மீ−3[1] |
உருகுநிலை | −15 °C (5 °F; 258 K)[1] stable below 0 °C (32 °F; 273 K)[2] |
கொதிநிலை | 50 °C (122 °F; 323 K)[1] |
வினைபுரியும் | |
கரைதிறன் | ஐதரோகுளோரிக் அமிலம் |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
4 |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈயம் டெட்ராகுளோரைடு (Lead tetrachloride) என்பது PbCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயம்(IV) குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. எண்ணெய்த் தன்மையுடன் மஞ்சள் நிற நீர்மமாகக் காணப்படும் ஈய டெட்ராகுளோரைடு 0 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத்தன்மையுடனும், 50 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைவும் அடைகிறது[2]. ஈயம் மைய அணுவாக உள்ள நான்முகி வடிவத்தில் இது படிகமாகிறது. Pb–Cl சகப்பிணைப்புகள் 247 பைக்கோமீட்டர் நீளமும், 243 கிலோயூல்.மோல் -1 பிணைப்பு ஆற்றலும் கொண்டுள்ளன[4]
ஈயம்(II) குளோரைடுடன் (PbCl2 ) ஐதரோகுளோரிக் அமிலம் (HCl) சேர்த்து குளோரின் வாயு முன்னிலையில்[5] (Cl2) வினைபுரியச் செய்தால் குளோரோபிளம்பிக் அமிலம் (H2PbCl6) கிடைக்கிறது. பின்னர் இதனுடன் அமோனியம் குளோரைடு (NH4Cl) சேர்த்து ஈயத்தின் அமோனியம் உப்புக் கரைசல் ((NH4)2PbCl6) தயாரிக்கப்படுகிறது. இருதியாக இக்கரைசலுடன் அடர் கந்தக அமிலத்தைச் (H2SO4) சேர்த்து சூடுபடுத்தப்பட்டு ஈயம் டெட்ராகுளோரைடு பிரித்தெடுக்கப்படுகிறது. தொடர்ச்சியான இவ்வினைகள் யாவும் 0° செல்சியசு வெப்பநிலையில் நடைபெறுகின்றன. இவ்வினைகளுக்கான சமன்பாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
கார்பன் டெட்ரா குளொரைடு போல அல்லாமல் மற்றொரு நான்காம் தொகுதி குளோரைடான ஈயம் டெட்ராகுளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது. ஏனெனில் மைய அணுவான ஈயம் கார்பன் அணுவை விட பெரியது என்பதால் குழறுதல் குறைவாகி இவ்வினை நிகழ்கிறது[3]. Pb அணுவின் மேலுள்ள d சுற்றுப்பாதை காலியாக இருப்பதாலும் Pb–Cl பிணைப்பு உடைவதற்குள் குறைவான ஆற்றல் தேவையுடன் ஆக்சிசன் அணுவால் இணைய முடிகிறது. இதற்கான ஒட்டுமொத்த வினையின் சமன்பாடு இங்கு தரப்பட்டுள்ளது.
ஈயம் டெட்ராகுளோரைடு மேலும் சிதைவடைந்து ஈயம்(II) குளோரைடும், குளோரின் வாயுவும் உருவாகின்றன.
PbCl4 → PbCl2 + Cl2(வாயு)
தனிம வரிசை அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும் போது +4 ஆக்சிசனேற்ற நிலை குறைகிறது. எனவே +4 ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும் ஈயம் டெட்ராகுளோரைடு, +2 ஆக்சிசனேற்ற நிலையிலான ஈயம்(II) குளோரைடுக்கு மாறுகிறது. ஈயம் அணு வெளிக்கூட்டில் உள்ள அனைத்து p எலக்ட்ரான்களையும் இழந்து நிலைப்புத்தன்மையை அடைகிறது.[6]
ஈயம் ஒரு திரள்விளைவான நச்சுத்தன்மை கொண்டதாகும். ஈயத்தின் புற்றுநோய் அபாயங்கள் தொடர்பான குரைவான ஆதாரங்களே கிடைத்துள்ளன. ஆனால் ஈயம் டெட்ராகுளோரைடு உள்ளிட்ட பிற ஈயம் சேர்மங்கள் மனிதர்களிடம் புற்றுநோய் ஊக்கிக்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது[7]. ஈயம் சேர்மங்கள் பல்வேறு வழிகளில் மனித உடலுக்குள் ஈர்க்கப்படுகின்றன. ஈயத்தின் சேர்மங்கள் கரு ஊனமாக்கிகள் என்றும் கருதப்படுகிறது[8]