'ஈரம் சேமிக்கும் திசு' Velamen என்பது மந்தாரை orchid போன்ற ஒட்டுண்ணி தாவர வேர்களை மூடிகாணப்படும் பஞ்சு போன்ற திசு ஆகும்.
மந்தாரை தாவரத்தின் ஈரம் சேமிக்கும் திசு வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் காணப்படும், இது மூச்சு வேர்களை மூடிகாணப்படும். இவை பல செல் அடுக்குகளால் ஆனவை. வளிமண்டல ஈரத்தையும் உணவையும் உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையவை. இருப்பினும் இதன் முக்கிய பணி வேர்களை புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பதாகும். [1]
மந்தாரை தாவர வேர்கள் பொதுவாக கூட்டுயிரி பூஞ்சை அல்லது பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டிருக்கும். பாக்டீரியா வழி மண்டல உணவை பெற்றுத்தரும். இதனால் மந்தாரை தாவரங்கள் போட்டியின்றி நன்கு வளரவும் முடிகிறது.
மந்தாரை, வேரில் உள்ள கடத்து திசுக்களை பாதுகாக்கிறது, வேர் மூலம் ஏற்படும் நீரவிப்போக்கை தடுக்கிறது, பெரும்பாலான சமயங்களில் தாவரத்தை வளர்தளத்தில் பற்றிக்கொள்ள உதவுகிறது.
மந்தாரை தாவர வேரின் கற்றையின் (stele) பருமன் சிறியது. இது புறனியால் சூழப்பட்டு மேலும் சிறப்பு வகை புரத்தோலினால் மூடப்பட்டுள்ளது. முதிர்ந்த புறத்தோல் செல்களில் புரோடோப்ளாசம் காணப்படுவதில்லை. ஒரு சில உயிருள்ள செல்களில் மட்டும் நீர் கடத்தப்படுகிறது. சிறப்பு வகை புறத்தோலை பல அடுக்கு செல்கள் கொண்ட ஈரம் சேமிக்கும் திசு மூடியுள்ளது. சாதகமான சூழலில் ஈரம் சேமிக்கும் திசு மீது வேர் தூவிகள் வளர்கின்றன.
ஈரம் சேமிக்கும் திசு, வேரின் நுனியில் உள்ள சிறப்பு திசுக்களில் இருந்து உண்டாகிறது. ஒளிஉட்புகுவதால் ஈரம் சேமிக்கும் திசுவின் செல்கள் வெளிர் நிறத்தில் காணப்படும். நீரை உறிஞ்சிய பின் பச்சை நிறத்தில் காணப்படும்.