சிறீ சனாதன தர்ம மண்டல் கோயில், கம்பாலா , உகாண்டா
கிழக்கு ஆப்பிரிகாவில் உகாண்டா நாட்டின் அமைவிடம்
உகாண்டாவில் இந்து சமயம் (Hinduism in Uganda), பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் உகாண்டா இருந்த போதே இந்து சமயம் உகாண்டாவில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.[ 1] [ 2] இந்திய விடுதலைக்கு முன்னர் குஜராத்திகள் , ஜெயினர் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட 32,000 பணியாளர்களை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தையும், உகாண்டாவுடன் இணைக்கும் இருப்புப் பாதைகள் அமைக்கவும்,[ 3] [ 4] மற்றும் கட்டுமாணப் பணிகளுக்காகவும், நிர்வாகப் பணிகளுக்காவும் பிரித்தானியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[ 1] [ 2] [ 5]
பிரித்தானியா காலனியாதிக்கத்திலிருது விடுதலை பெற்ற பின் ஆட்சிக்கு வந்த அதிபர் இடி அமீன் ஆட்சியில், புதிய சட்டத்தின் மூலம், 1972ல் இந்துக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[ 3] [ 4] [ 6]
மக்கள் தொகை பரம்பல்[ தொகு ]
2015ஆம் மதிப்பீட்டின்படி, உகாண்டா நாட்டில் ஏறத்தாழ் 3,55,497 (0.93%) இந்து சமயத்தவர்கள் உள்ளனர்[ 7] [ 8]
வரலாற்றில் இந்து மக்கள் தொகை ஆண்டு ம.தொ. ±% 1970 65,000 — 2015 3,55,497 +446.9% ஆதாரம்: [ 9] [ 10]
ஆண்டு
%
உயர்வு
1970
0.69%
-
2015
0.93%
+0.24%
இடி அமீன் ஆட்சியில் வெளியேற்றப்பட்ட இந்துக்களும், மற்றவர்களும்[ தொகு ]
1972ல் இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களை உகாண்டாவை விட்டு வெளியேற்றிய உகாண்டா அதிபர் இடி அமீன்
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர், உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமீன் , 1972ல் இந்திய இந்துக்கள், ஜெயினர்கள் , பஞ்சாபியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களின் வேலை மற்றும் அனைத்து உடமைகளைப் பறித்துக் கொண்டு, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[ 11] [ 12] [ 13] [ 14] [ 15] [ 16] [ 17] [ 18]
இடி அமீனுக்குப் பின்னர்[ தொகு ]
இடி அமீனால் இந்துக்கள் வெளியேற்றப்பட்ட 20 ஆண்டு காலத்திற்குப் பின்னர், உகாண்டா அரசு இந்திய சமூகத்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. உகாண்டாவின் 27 மில்லியன் மக்கள் தொகையில், ஆசிய நாட்டவர்களில் 65% இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆவார்.[ 3] உகாண்டாவின் கம்பாலா நகரத்தில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது.[ 19]
↑ 1.0 1.1 Sushil Mittal; Gene Thursby (2009). Studying Hinduism: Key Concepts and Methods . Routledge. pp. 87–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-41829-9 .
↑ 2.0 2.1 Kim Knott (2016). Hinduism: A Very Short Introduction . Oxford University Press. pp. 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-874554-9 .
↑ 3.0 3.1 3.2 Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism . Infobase Publishing. pp. 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5 .
↑ 4.0 4.1 Malory Nye (2013). A Place for Our Gods: The Construction of an Edinburgh Hindu Temple Community . Routledge. pp. 48–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-78504-7 .
↑ David Levinson; Karen Christensen (2003). Encyclopedia of Community: From the Village to the Virtual World . Sage Publications. p. 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-2598-9 .
↑ David S. Fick (2002). Entrepreneurship in Africa: A Study of Successes . Greenwood Publishing. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56720-536-7 .
↑ "Uganda, Religion And Social Profile" . thearda.com . Archived from the original on 2021-08-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-02 .
↑ The ARDA website, retrieved 2023-08-08
↑ Kim Knott (2016). Hinduism: A Very Short Introduction . Oxford University Press. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-106271-1 .
↑ "Uganda, Religion And Social Profile" . thearda.com . Archived from the original on 2021-08-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-02 .
↑ Steven Vertovec (2013). "Chapter 4". The Hindu Diaspora: Comparative Patterns . Taylor & Francis. pp. 87–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-36712-0 .
↑ Ndlovu-Gatsheni, Sabelo J.; Ndhlovu, Finex (2013). Nationalism and National Projects in Southern Africa: New Critical Reflections . Africa Institute of South Africa. pp. 62–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7983-0395-8 .
↑ Ronald Aminzade (2013). Race, Nation, and Citizenship in Postcolonial Africa: The Case of Tanzania . Cambridge University Press. pp. 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-43605-3 .
↑ John E. Roemer; Woojin Lee; Karine van der Straeten (2007). Racism, Xenophobia, and Distribution: Multi-issue Politics in Advanced Democracies . Harvard University Press. pp. 147–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-02495-3 .
↑ Harold G. Coward; John R. Hinnells; Raymond Brady Williams (2012). The South Asian Religious Diaspora in Britain, Canada, and the United States . State University of New York Press. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-9302-1 .
↑ M.G. Vassanji (2012). No New Land . McClelland & Stewart. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55199-707-0 .
↑ John S. Pobee (1976). Religion in a Pluralistic Society . BRILL Academic. pp. 40–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04556-2 .
↑ E. Khiddu-Makubuya, Victoria Miriam Mwaka and P. Godfrey Okoth (1994). Uganda, thirty years of independence, 1962–1992 . Makerere University Press. p. 243.
↑ BAPS Shri Swaminarayan Mandir , BAPS Swaminarayan Sanstha, Africa