உசுமானியா மருத்துவக் கல்லூரி , என்பது முன்னர் ஐதராபாத்து மருத்துவப் பள்ளி என்று அழைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1846ஆம் ஆண்டு ஐதராபாத் 5வது நிஜாம் மற்றும் பேரர் , அப்சல் உத் டவ்லா, ஆசஃப் ஜா 5 ஆகியோரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி முதலில் உசுமானியா பல்கலைக்கழக இணைவினைப் பெற்றிருந்தது. இப்போது கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் இணைவுடன் உசுமானியா பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[ 1] [ 2] 1919 -ல் உசுமானியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பிறகு, ஐதராபாத்து ஏழாவது நிஜாம் மிர் ஓசுமான் அலி கானின் நினைவாக, உசுமானியா மருத்துவக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது.[ 3]
இணைந்த சிறப்பு பயிற்சி மருத்துவமனைகள்[ தொகு ]
உசுமானியா பொது மருத்துவமனை, அப்சல்கஞ்ச்
நிலூஃபர் மருத்துவமனை
சர் ரொனால்ட் ரோஸ் வெப்பமண்டல தொற்று நோய் நிறுவனம்
சரோஜினி தேவி கண் மருத்துவமனை
அரசு காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை
மனநல நிறுவனம், எர்ரகட்டா
அரசு மார்பக நோய் மருத்துவமனை (காசநோய்), எர்ரகட்டா
அரசு மகப்பேறு மருத்துவமனை, சுல்தான் பஜார்
நவீன அரசு மகப்பேறு மருத்துவமனை, பெட்லபுர்ஜ்
எம். என். ஜெ. மண்டல புற்றுநோய் மருத்துவமனை நிறுவனம் , லக்டிகாபுல்
உசுமானியா மருத்துவக் கல்லூரி 1846-ல் நிறுவப்பட்டு ஐதராபாத் மருத்துவப் பள்ளி என்று பெயரிடப்பட்டது.[ 4] நிஜாம் நீரிழிவு நோய்வாய்ப்பட்டபோது, அப்போதைய பிரித்தானிய குடியுரிமையாளர், அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் வில்லியம் கேம்ப்பெல் மக்லீன் மூலம் மேற்கத்திய மருத்துவத்தில் சிகிச்சை பெறப் பரிந்துரைத்தார். நிஜாம் முழுமையாகக் குணமடைந்தார். ஆங்கில மருத்துவத்தில் ஈர்க்கப்பட்ட நிஜாம், 1847-ல் ஐதராபாத்து மருத்துவப் பள்ளியை (பின்னர் உசுமானியா மருத்துவக் கல்லூரியாக மாறியது) மருத்துவர் மக்லீன் தலைமையில் நிறுவ உத்தரவிட்டார்.[ 4]
ஐதராபாத்து மருத்துவப் பள்ளியின் அப்போதைய முதல்வர் மருத்துவர் எட்வர்ட் லாரி, அப்சல் குஞ்ச் மருத்துவமனையில் (இப்போது உசுமானியா பொது மருத்துவமனை) மயக்க மருந்து[ 5] (ஐதராபாத்து குளோரோபார்ம் ஆணையம்) மீது தொடர்ச்சியான பரிசோதனைகளைச் செய்தார்.[ 4] உலகின் முதல் பெண் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ரூபா பாய் புர்தூன்ஜி 1889-ல் இங்கிருந்து பட்டம் பெற்றார் [ 6]
உசுமானியா மருத்துவக் கல்லூரி 2020-ல் இந்தியா டுடே தரவரிசைப் போட்டியில் 20வது இடத்தைப் பிடித்தது
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[ தொகு ]
மருத்துவர் ரூபா பாய் புர்தூன்ஜி, மயக்க மருந்து நிபுணர்[ 6]
உந்துருட்டி நரசிம்ம தாஸ், நோயெதிர்ப்பு நிபுணர், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்றவர்
மஞ்சுளா அனகனி, மகப்பேறு மருத்துவர் [ 7]
பூரா நர்சய்யா கவுட் , நாடாளுமன்ற உறுப்பினர்
செலிக்கனி வெங்கட ராமராவ், பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
பி.சங்கர் ராவ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஜே. கீதா ரெட்டி , சட்டமன்ற உறுப்பினர்
கே. ஸ்ரீநாத் ரெட்டி, இந்திய பொதுச் சுகாதார அறக்கட்டளையின் தலைவர்
மண்டாடி பிரபாகர் ரெட்டி , தெலுங்கு குணச்சித்திர நடிகர்
நாகம் ஜனார்தன் ரெட்டி, நகர் கர்னூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தேஜஸ்வினி மனோக்னா, மாடல் (புவி அழகி இந்தியா 2019)
சதீஷ் எஸ்சி ராவ், குடலியக்க நிபுணர், புகழ்பெற்ற ஜார்ஜியா (அமெரிக்கா) பல்கலைக்கழகத் தலைவர், மருத்துவக் கல்லூரி
அசோக் கொண்டூர், இண்டர்வென்ஷனல் இதய நோய் நிபுணர், மிச்சிகன், அமெரிக்கா; கார்டன் சிட்டி மருத்துவமனையின் திட்ட இயக்குநர்
மருத்துவர் சந்திர பெம்மாசானி, யுவார்ல்டு நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர்[ 8]
↑ "List of Colleges Offering B.sc MLT Courses Under Kaloji Narayana Rao University of Health Sciences, Warangal, Telangana State For the Academic Year 2016-17" (PDF) . Kaloji Narayana Rao University of Health Sciences. பார்க்கப்பட்ட நாள் 23 January 2018 .
↑ "Osmania Medical College, Hyderabad" . bestindiaedu . Archived from the original on 22 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018 .
↑ Ali, M.; Ramachari, A. (1996). "One hundred fifty years of Osmania Medical College (1846-1996)". Bulletin of the Indian Institute of History of Medicine (Hyderabad) 26 (1–2): 119–141. பன்னாட்டுத் தர தொடர் எண் :0304-9558 . பப்மெட் :11619394 .
↑ 4.0 4.1 4.2
DR Mohammed Najeeb (5 July 2020). "Chloroform & how modern medicine came to Hyderabad" . The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021 .
↑ "By destroying Osmania General Hospital, Telangana will lose a great legacy" . www.dailyo.in . பார்க்கப்பட்ட நாள் 2018-09-16 .
↑ 6.0 6.1 Ala, Narayana; K, Bharathi; PKJP, Subhaktha; Gundeti, Manohar; A, Ramachari (2010). "Dr. (Miss) Rupa Bai Furdoonji: World's first qualified lady anaesthetist" . Indian Journal of Anaesthesia 54 (3): 259–261. doi :10.4103/0019-5049.65371 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0019-5049 . பப்மெட் :20885878 .
↑ "Dr.Manjula Anagani Consultant Gynecologist\Laparoscopic Surgeon, Infertility Specialist in Hyderabad" . drmanjula.in . பார்க்கப்பட்ட நாள் 2019-03-13 .
↑ "Meet Dr. Chandra S. Pemmasani, founder and CEO of UWorld" . Archived from the original on 14 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022 .