உசுரா பட் (ஆங்கிலம் : Uzra Butt ) (22 மே 1917 - 31 மே 2010) மும்தாசு என்ற இயற்பெயருடன் இருந்த இந்திய துணைக் கண்டத்தின் [1] நாடக ஆளுமை, இவர் 1964 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். அவர் நாடக மற்றும் பாலிவுட் திரைப்பட நடிகை சோரா சேகலின் சகோதரியாவார். இவரைப் போலல்லாமல் சேகல் இந்தியாவில் வாழ்ந்தார்.
பாரம்பரிய தடைகளை உடைத்து 1937 ஆம் ஆண்டு தொடங்கி, அவரும் அவரது சகோதரியும் உதய் சங்கர் பாலே நிறுவனத்தில் நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களாக சேர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். இரண்டாம் உலகப் போர் அவர்களின் சுற்றுப்பயணத்தை முடித்து வைத்தது, அவர் இந்திய மக்கள் நாடக சங்கத்தில் சேர்ந்தார், பின்னர் 1940 கள் மற்றும் 1950 களில் பிருத்வி நாடக அரங்கில் முன்னணி நாயகியாக இருந்தார்.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த ரோஹில்லா பஷ்தூனை சேர்ந்த சொந்தமாக நிலம் வைத்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் மும்தாசுல்லா கான் மற்றும் நாட்டிகா பேகம் ஆகியோருக்கு உசுரா மும்தாஜ் என்ற இயற்பெயருடன் பிறந்தார் [2] அவர் தனது ஏழு உடன்பிறப்புகளில் நான்காவது இடத்தில் இருந்தார் - ஜாகுல்லா, ஹஜ்ரா, ஜோஹ்ரா (ஜோஹ்ரா சேகல்), இக்ரமுல்லா, அன்னா மற்றும் சபிரா, மற்றும் தேராதூன்அருகிலுள்ள சக்ரதாவில் வளர்ந்தார். எழுத்தாளர் கிரண் செகல் இவரது மருமகளராவார். நடிகை சாமியா மும்தாஸ் பெரிய மருமகளாவார்.
1937 ஆம் ஆண்டில் உதய் சங்கரின் பாலே நிறுவனத்துடன் தனது மேடை வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 1940 கள் மற்றும் 50 களில் பிரபலமான பிருத்வி நாடக அரங்கில் முன்னணி பெண்மணி ஆனார். [2]
உதய சங்கரின் பாலே குழுவில் நடனக் கலைஞராக நுழைந்த அவர், 1944 ஆம் ஆண்டில் ஒரு நடிகையாக இந்திய மக்கள் நாடக சங்கத்தில் (ஐபிடிஏ) சேருவதற்கு முன்பு நடனத்தையும் கற்பித்தார். அங்கே குவாஜா அஹ்மத் அப்பாஸ் இயக்கத்தில் ஜூபேடா என்ற நாடகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பிருதிவி ராஜ் கபூர் அவரது பாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, அவரை தனது முன்னணி கதாநாயகியாக தேர்வு செய்தார், ஜோஹ்ராவும் அவருடன் சேர்ந்தார். பிந்தைய ஆண்டுகளில், பிருத்வி நாடக அரங்குகளின் தயாரிப்புகளில் பிருத்விராஜ் கபூருக்கு இணையாக முன்னணி பெண்ணாக நடித்தார். அவள் 1944 ல் சகுந்தலா என்ற நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார் 1948 ஆம் ஆண்டில் தனது சகோதரியுடன் கூட்டு சேர்ந்து கிசான் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது நூறு ஊர்கள் நகரங்களிலும், நிகழ்த்தப்பட்டது உசுரா பட் பிருத்வி தியேட்டரின் கலை இயக்குநராகவும் இருந்தார், மேலும் பிருத்வி தியேட்டரில் 1960 வரை பணியாற்றினார். [2]
1964 ஆம் ஆண்டில் அவர் தனது கணவர் கமீத் பட்டுடன் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இங்கே அவர் ராவல்பிண்டியில் ஒரு நடன குழுவை உருவாக்கி, அவ்வப்போது மேடை மற்றும் தொலைக்காட்சியில் நடித்து, பாக்கித்தான் தேசிய கலை அமைப்புக்கு சேவை செய்தார்.
பின்னர் அவர் லாகூருக்குச் சென்று அக்டோபர் 1985 இல் அஜோகா நாடக அரங்கில் சேர்ந்தார். அவரது குழுவின் ஆரம்ப நடிப்பு 'சாக் சக்கர்' என்ற நாடகத்தில் தொடங்கியது. மேலும் பாரி, துக்கினி, துக் தர்யா, டேக்கி டா தமாஷா, தாலிஸ்மதி டாடா, தீஸ்ரி தஸ்தக், காளி கட்டா, ஆதுரி மற்றும் சூரக் குலாபன் டா மௌசம் போன்ற நாடகங்களிலில் நடிக்கத் தொடங்கினார். அவர் குழுவின் தலைவராக தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1993 ஆம் ஆண்டில் நாற்பது வருட இடைவெளிக்குப் பிறகு அவர் தனது சகோதரி சோரா சேகலுடன் செகலுடன் ஐக் தி நானி என்ற நாடகத்தில் நடித்தார். அதில் அவர்கள் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர் மற்றும் நடிகர்களாக தங்கள் பேத்தி, சாமியா மும்தாஜ் மற்றும் மருமகள் சலீமா ராசா ஆகியோர் அடங்குவர். இந்த நாடகம் 2003 இல் லாகூரில் ஆரம்பித்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிரித்தனிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இதில் 2004 இல் பிருத்வி நாடக அரங்க்கின் ஒரு நிகழ்ச்சி இருந்தது. 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடதியான சங்கீத நாடக அகாதமியால் உசுராவுக்கு நடிப்புிற்காக(உருது) சங்க நசங்கீத ாடக அகாடதி விருது வழங்கப்பட்டது. இது இந்தியாவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரமாகும். [3]
அவரது கடைசி நடிப்பு 2008 இல் இருந்தது. அவர் பாகிஸ்தானின் லாகூரில் 93 வயதில் இறந்தார். [4]