உடற்கூற்றியல் மாதிரி (Anatomical model) என்பது மருத்துவ அல்லது உயிரியல் கல்விக்கு பயன்படுத்தப்படும் மனித அல்லது விலங்கு உடற்கூற்றியலின் முப்பரிமாண பிரதிநிதித்துவம் ஆகும். [1]
உடற்கூறியலை பகுதியளவு வெட்டப்பட்டதாக காட்டும் வகையில் அல்லது நீக்கக்கூடிய பாகங்களைக் கொண்டிருப்பதாக இருக்கும் வகையில் இம்மாதிரிகள் இருக்கும். மாதிரி உடல் பாகங்களை அகற்றவும் ஆய்வு செய்யவும் மாணவனை இம்மாதிரிகள் அனுமதிக்கின்றன.
உடற்கூறியல் முப்பரிமாண கணினி மாதிரிகள் இப்போது ஒரு மாற்றாக இருந்தாலும், உடற்கூறியல் பற்றிய நுண்ணறிவை வழங்குவதில் உடற்கூறியல் மாதிரிகள் இன்னும் நன்மைகளைக் கொண்டுள்ளன. [2]