படிமம்:Food Empowerment Project Logo.jpg உணவு அதிகாரமளிக்கும் திட்ட நிறுவனத்தின் இலச்சினை | |
சுருக்கம் | F.E.P. |
---|---|
உருவாக்கம் | 2006 |
சட்ட நிலை | இலாப நோக்கற்ற அமைப்பு |
நோக்கம் | உணவு நீதி, நனிசைவம், விலங்குரிமை |
தலைமையகம் | சான் ஒசே, கலிபோர்னியா |
வலைத்தளம் | foodispower |
உணவு அதிகாரமளிக்கும் திட்டம் (ஆங்கிலம்: Food Empowerment Project அல்லது F.E.P.) என்பது நனிசைவம் மற்றும் உணவு நீதியை மையமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அடிப்படையிலான இலாப நோக்கற்ற அமைப்பாகும். அதன் பணி அறிக்கையாவது "ஒருவரின் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதன் மூலம் மிகவும் நியாயமான, நிலையான உலகத்தை உருவாக்குவது" என்பதாகும்.[1] 2006-ஆம் ஆண்டு லாரன் ஓர்னெலா எனபவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தை இன்றுவரை தொடர்ந்து அவரே வழிநடத்தி வருகிறார்.[1] கலிபோர்னியாவின் சான் ஓசே நகரைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் 2016-ம் ஆண்டு வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டல் நகரில் கூடுதலாக ஒரு அத்தியாயத்தைத் துவங்கியது.[2][3]