உதய் சிங் Uday Singh | |
---|---|
பூர்ணியா பூர்ணியா நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். | |
பதவியில் 2004–2014 | |
முன்னையவர் | பப்பு யாதவ் |
பின்னவர் | சந்தோசு குமார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 நவம்பர் 1952 பட்னா, பீகார் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உரூபி சிங் |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 1 மகள் |
வாழிடம் | பூர்ணியா |
உதய் சிங் (Uday Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மற்றும் 15 ஆவது மக்களவைகளில் இவர் உறுப்பினராக இருந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக பீகாரின் பூர்ணியா தொகுதியை உதய் சிங் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மாதுரி சிங்கின் மகனாக அறியப்படுகிறார். மாதுரி சிங்கும் இதே தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு மாறினார்.[1] பீகாரின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர் 18000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு சொந்தக்காரர் ஆவார். இவரிடம் தனி விமானமும் இருந்தது. ஒரு தொழிலதிபராக பாரதீய சனதா மற்றும் காங்கிரசு கட்சிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார்.