உதௌலி | |
---|---|
கிராத மக்களால் உதௌலி கொண்டாட்டம் நடைபெறுகிறது. | |
கடைப்பிடிப்போர் | கிராத மக்கள் சமூகம் |
வகை | கிராத மக்கள் திருவிழா |
அனுசரிப்புகள் | பிரார்த்தனை & சமய சடங்குகள் |
நாள் | நவம்பர்-திசம்பர் (சந்திர நாட்காட்டி) |
நிகழ்வு | வருடம் ஒருமுறை |
உதௌலி(Udhauli) என்பது நேபாள இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சுனுவார், லிம்பு, யக்கா, கம்பு ராய் போன்ற கிராத சமூகங்களின் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் கீழ்நோக்கி இடம்பெயர்வதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. குளிர்காலம் வரும்போது தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள், தாழ்வான பகுதிகளிலிருந்து மேல்நோக்கி மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்வது உபௌலி (மேலே) என்று அழைக்கப்படுகிறது, இது இந்த சமூகங்களின் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. [1] உதௌலி பண்டிகை நாளில், கிராத மக்கள் நல்ல அறுவடையை வழங்கிய இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
உதௌலி பண்டிகை அனைத்து கிராத மக்களாலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் திசம்பர் வரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து குளிர்காலம் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் அங்குள்ள மக்கள், குளிர் பிரதேசங்களில் இருந்து வெப்பமான பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். மேலும், பறவைகள் மற்றும் விலங்குகளும் இடப்பெயர்ச்சி செய்கின்றன. இது முக்கியமாக நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் சகேலா அல்லது பொதுவாக சண்டி என்று அழைக்கப்படும் ஒரு கவர்ச்சியான நடனத்தை ஆடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த நடனம் நேபாளத்தில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. மேலும் தோல் வாத்தியம் / டிரம், ஜியம்தா / சிலம்பங்கள் போன்றவற்றின் தாளத்துடன் இந்த நடனம் ஒரு வட்டத்தில் இணக்கமாக நடனமாடப்படுகிறது.
சகேலாவின் முக்கிய இடங்கள் தரன், தன்குடா, பதரி, கனேபோகாரி, கெராபரி போன்றவை ஆகும். கிராத மக்களின் இந்த நிகழ்வு 'முந்தும்' எனப்படும் கிராத மக்களின் புனித நூலிலும் கூறப்பட்டுள்ளது. [2]