உத்தரன் | |
---|---|
விராட நாட்டு பட்டத்து இளவரசன் | |
உத்தரன் மற்றும் அருச்சுனன் போராயுதங்களைத் தேடல் | |
பிறப்பு | விராட நகர் |
இறப்பு | குருச்சேத்திரப் போர்க்களம் |
மரபு | மத்ஸ்யம் |
அரசமரபு | மத்ஸ்ய அரச குலம் |
தந்தை | விராடன் |
தாய் | சுதோஷ்னை |
உத்தரன் (Uttar or Uttara) (சமஸ்கிருதம்): उत्तर), மகாபாரதம் கூறும் மத்ஸ்ய நாட்டு மன்னன் விராடனின் மூத்த மகன். உத்தரையின் சகோதரன்.[1]
பாண்டவர்கள், விராடனை அரசனாகக் கொண்ட மத்ஸ்ய நாட்டு அரண்மனையில் திரௌபதியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, பதிமூன்றாம் ஆண்டு முடியும் தருவாயில், துரியோதனன், அத்தினாபுரத்து படைகளுடன், விராடனின் நாட்டை தாக்கினார்கள். மத்ஸ்ய நாட்டு மன்னன் விராடன், தனது படைகளுடன் திரிகர்த்த நாட்டு மன்னனுடன் போரிடச் சென்றிருந்த நேரத்தில், துரியோதனன், அத்தினாபுரத்து படைகளுடன், விராடனின் நாட்டை தாக்கினார்கள். பிருகன்னளை என்ற பெயர் தாங்கிய அருச்சுனனை தேரோட்டியாகக் கொண்ட உத்தர குமாரன், துரியோதனனின் படைகளை எதிர்கொள்ளத் துணிவின்றி புறமுதுகிட்டு ஓடினான்.
அருச்சுனன், தான் பிருகன்னளை அல்ல என்றும், தான் பாண்டவர்களில் அருச்சுனன் என்று உரைத்து, பின் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த போராயுதங்களை உத்தரனைக் கொண்டு எடுத்து, அருச்சுனன் தனி ஆளாக போர்களத்தில் நின்று, துரியோதனன், பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரி, அசுவத்தாமன் மற்றும் கர்ணன் ஆகியோர்களை வெற்றி கொண்டான்.
பின் உத்தர குமாரன் போர்கலையை அருச்சுனனிடம் திறம்படக் கற்றான்.
குருச்சேத்திரப் போரில் உத்தர குமாரன், பாண்டவர் அணியில் நின்று போரிட்டான். முதல் நாள் போரில் சல்லியனால் உத்தர குமாரன் கொல்லப்பட்டான். அவனது சகோதரர்கள், சுவேதன் மற்றும் சாங்கியன் ஆகியவர் சல்லியனாலும், துரோணராலும், குருச்சேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.