உத்தரா உன்னி | |
---|---|
வௌவால் பசங்க படபிடிப்பின்போது உத்தரா | |
பிறப்பு | 14-10-1992 திருவல்லா, கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | பரதநாட்டிய நடனக் கலைஞர் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012–2018 |
பெற்றோர் | ஏ. இராமுன்னி ஊர்மிளா உன்னி |
வலைத்தளம் | |
www |
உத்தரா உன்னி (Utthara Unni) கேரளாவைச் சேர்ந்த பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். இவர் சில குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை நிகழ்படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு நடிகையும் ஆவார்.[1] முக்கியமாக தமிழ் , மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் "கோவில் படிகள்" (Temple Steps)[2] என்ற நடன நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
சிதம்பரம், கும்பகோணம், திருநள்ளாறு, நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் , தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற நாட்டியஞ்சலி விழாக்களில் இவர் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது சில மேடைகளில் சூரிய நடன விழா - பாரம்பரியம்,[3] மயிலாப்பூர் நுண்கலை சபை - சென்னை, சங்கீத நாடக அகாதமி - திருச்சூர், நிஷாகந்தி - திருவனந்தபுரம், எர்ணாகுளம் சிவன் கோவில், குருவாயூர், மூகாம்பிகை கோவில், வைலோப்பிள்ளி சமசுகிருதி பவன் - திருவனந்தபுரம் போன்றவை அடங்கும். இவர், நேபாளம், தாய்லாந்து, யுஏஇ, அபுதாபி, ஷார்ஜா, பஹ்ரைன் , குவைத் போன்ற பிற நாடுகளிலும் தனி நடன நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.[4][5]
இவர் கொச்சினில் அமைந்துள்ள "கோவில் படிகள்" என்ற நடனப் பள்ளியின் இயக்குநராகவும் உள்ளார்,[6][7] அவர் யுனெஸ்கோ சர்வதேச நடனக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[8]
உத்தரா மலையாள நடிகை ஊர்மிளா உன்னி - தொழிலதிபர் நிதேஷ் எஸ் நாயர் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.[9]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)"Utthara Unni heads Dance Academy" பரணிடப்பட்டது 2015-07-29 at the வந்தவழி இயந்திரம். indiaglitz. 5 March 2015. Retrieved 10 May 2015.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)