உத்தானபாத ஆசனம்

உத்தானபாத ஆசனம் என்பது யோகக் கலையின் யோகாசனங்களில் ஒன்று

செய்முறை

[தொகு]
விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொண்டு நன்கு நீட்டிப் படுக்க வேண்டும். :உள்ளங்கைகள் தரையில் படிய வேண்டும்.
அடுத்து, முழங்கால்களை மடக்காமல் அப்படியே மேலே தரைக்கு மேல் தூக்க வேண்டும்.
பாதங்கள் தரையிலிருந்து குறைந்த பட்சம் ஓரடி உயரம் மேலே இருக்க வேண்டும்.
இதே நிலையில் நூறு எண்ணும் வரை இருக்க வேண்டும்.
பின்னர் மெல்லக் கால்களைக் கீழே இறக்கிப் பழைய நிலைக்கு வர வேண்டும்.
அடிவயிற்றில் நடுக்கம் மாதிரியான உணர்வு வந்தால் உடனே கால்களை மெதுவாகக் கீழே இறக்கிவிட வேண்டும்.

முதலில் இயல்பான சுவாசத்தில் செய்து பழகி விட்டுப் பின்னர் கால்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கால்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சையும் விட்டுப் பழக வேண்டும்.

பலன்கள்

[தொகு]

பாதத்தை மேலே தூக்குவதால் அடிவயிற்று உள்ளுறுப்புகள் நன்கு ரத்தம் பாய்ந்து வேலை செய்யும். அடிவயிற்றுத் தசைகள், சிறுநீரகம், பெண்களுக்குக் கர்ப்பப் பை, சூலகம் முதலியவற்றின் செயல்திறன் மேம்படும். அடிவயிற்றின் அதிகப்படி சதை, இடுப்புச் சதை ஆகியன குறையும் தொடை சதையும் குறையும்.


படம் இணைப்பு

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]