உன்னி முகுந்தன் | |
---|---|
பிறப்பு | 22 செப்டம்பர் 1987 அகமதாபாத், குஜராத், இந்தியா |
இருப்பிடம் | ஒட்டப்பலம்,கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரயோஜி நிகதன் கல்லூரி, புதுக்காடு |
பணி | திரைப்பட நடிகர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போது வரை |
பெற்றோர் | முகுந்தன் நாயர், ரோஜி முகுந்தன் |
உன்னி முகுந்தன் அல்லது உன்னி முகுந்தன் நாயர் (Malayalam: ഉണ്ണി മുകുന്ദൻ, English:Unnikrishnan Mukundan Nair) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகராவார்[1].தமிழ்த் திரைப்படம் சீடன் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உன்னி முகுந்தன் செப்டம்பர் 22, 1987 இல் குஜராத்தின் மாநிலம் அகமதாபாத்தில் மலையாளிக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை முகுந்தன் நாயர், தாயார் ரோஜி முகுந்தன். இவருக்கு ஒரு அக்கா உள்ளார். இவர் அகமதாபாத்திலேயே பிறந்து வளர்ந்தார். ஆங்கிலத்தில் இளங்கலை படித்தவர். நடிப்பைத் தவிர்த்து சிறுகதைகள் எழுதுவது, ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுவது, உடற்பயிற்சி ஆகியவற்றில் உன்னி முகுந்தன் கவனம் செலுத்தியுள்ளார்.
2002 இல் மலயாளத்தில் பிரிதிவிராஜின் நடிப்பில் வெளியான நந்தனம் திரைப்படத்தின் தமிழ் பதிப்பான சீடன் திரைப்படமே உன்னி முகுந்தனின் முதல் திரைப்படம்.[2] அதன் பிறகு பல சிறு சிறு வேடங்களில் நடித்தார். உன்னி முகுந்தனிற்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது இயக்குநர் வைசாக்கின் மலையாளத் திரைப்படமான மல்லு சிங்(2012). முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க பிருதிவிராஜ் ஒப்பந்தமானர். பிறகு அவரால் நடிக்க முடியாத காரணத்தினால் சிறு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான உன்னி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதால் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் உன்னிக்கு கிடைக்கத் தொடங்கின. ஐ லவ் மீ (2012), இது பாத்திரமானால் (2013), விக்ரமாதித்யன் (2014), கேஎல் 10 பத்து (2015), ஸ்டைல் (2016), காட்டும் மழையும் (2016), ஒரு முறை வந்து பார்த்தாயா (2016), அச்சையன்ஸ் (2017), கிளையன்ட் (2017), and மாஸ்டர் பீஸ் (2017) ஆகியவை உன்னி முகுந்தன் பெரிய கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்த படங்களாகும். உன்னி முகுந்தன் தெலுங்கில் அறிமுகமானது 2016 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஜனதா கேரேஜ் திரைப்படம் ஆகும். இவர் மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பாம்பே மார்ச் 12 மூலம் அறிமுகமானார்.[3] டி.கே.ராஜ்குமாரின் தல்சமயம் ஒரு பெண்குட்டி எனும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.[4][5][6] [7]
2011 ஆம் வருடம் தமிழ் மற்றும், மலையாளம் மொழியில் உன்னி முகுந்தன் நடிகராக அறிமுகமானார். சீடன், பாம்பே மார்ச், பேங்க்காக் சம்மர் ஆகிய மூன்றும் 2011 ஆம் ஆண்டு உன்னியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும். 2012 ஆம் ஆண்டில் இவரின் 6 திரைப்படன்கள் வெளியாகின. மல்லு சிங் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், 100 நாட்கள் திரையிடப்பட்டது. துல்கர் சல்மானின் தீர்வம் திரைப்படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். ஏழம் சூரியன் திரைப்படத்தில் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்தார். 2013, 2014 ஆகிய இரண்டு வருடங்களும் தலா மூன்று மூன்று படங்களில் நடித்தார். அவற்றில் விக்ரமாதித்யன் மற்றும் ராஜாதி ராஜா ஆகியவை வெற்றி பெற்றதுடன், விக்ரமாதித்யன் நூறு நாட்கள் திரையிடப்பட்டது. 2015 இல் நான்கு திரைப்படங்களில் நடித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனதா கேரேஜ் எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் உன்னி முகுந்தன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எட்டு நாட்களில் நூறு கோடி வசூலைத் தாண்டியது. 2017 இல் வெளிவந்த அச்சன்ஸ் திரைப்படம் மூலம் பின்னனிப் பாடகராகவும் அறிமுகமானார்.
வருடம் | விருது | வகை | திரைப்படம் | மூலம் |
---|---|---|---|---|
2011 | ஆசியாநெட் திரைப்பட விருதுகள் | 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த புதுமுகம் | பாம்பே மார்ச் 12 | |
ஆசியாவிஷன் திரைப்பட விருதுகள் | 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த புதுமுகம் | |||
வனிதா திரைப்பட விருதுகள் | திரைப்பட விருதுகள் | |||
ஜெய்கிந்த் டிவி திரைப்பட விருதுகள் | 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த புதுவரவு | |||
அம்ருதா டிவி திரைப்பட விருதுகள் | சிறந்த அறிமுக நடிகர் | |||
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | சிறந்த அறிமுக நடிகர் (மலையாளம்) | |||
2017 | ||||
ஆனந் டிவி திரைப்பட விருதுகள் | சிறந்த யுவன் | அச்சயன்ஸ் | ||
ரெட் எப்.எம் மலையாளம் இசை விருதுகள்
2017 || சிறந்த நட்சத்திர பாடகர் || | ||||
ராமு கரியட் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகர் | கிளையன்ட் |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)