உன்னுடன் | |
---|---|
![]() அட்டை விளம்பரம் | |
இயக்கம் | ஆர். பாலு |
தயாரிப்பு | அரோமா மணி |
கதை | ஆர். பாலு |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | |
கலையகம் | சுனிதா புரொடக்சன்சு |
வெளியீடு | அக்டோபர் 18, 1998 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னுடன் (Unnudan) 1998இல் ஆர். பாலு எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காதல் தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தில் முரளி, கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் விவேக், மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 1998 அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்டது.
சந்தோசு தனது மாமாவுடன் ஒரு மருந்துக் கடையை நடத்தி வருகிறார். அவர் தனது தாயுடன் வசிக்கிறார். கௌரி தனது தாத்தாவுடன் வசிக்கும் அரசு மருத்துவமனை மருத்துவ மாணவி, இருவரும் நண்பர்களாகி, ஒருவருக்கொருவர் துணையாக இருக்க விரும்புகிறார்கள். சந்தோசு கௌரியின் மீது காதல் கொள்கிறார். ஆனால் கௌரிக்காக தனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. அதேபோல் கௌரி சந்தோசைக் காதலிக்கிறார். ஆனால் கௌரி கடிதத்தின் மூலம் அவரை அணுக முடியவில்லை. கௌரியின் தாத்தா அவரது காதலுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் கௌரிக்கு உதவுவதாகக் கூறுகிறார். மேலும் இதைப் பற்றி சந்தோசிடம் கூறுவதாக உறுதியளிக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் காலமானார். கௌரி தனது இறுதிப் தேர்வை முடித்தவுடன், கௌரியின் பெற்றோர் அவரை மீண்டும் அவரது சொந்த ஊரான கொச்சினுக்கு அழைத்துச் செல்லத் தயாராக உள்ளனர். கௌரி அனுப்பும் ஒரு கடிதம் அந்நேரத்தில் சந்தோசின் கைகளை அடைகிறது. அவர் கௌரியை சந்திக்க தொடருந்து நிலையத்திற்கு விரைகிறார். ஆனால் தொடருந்து நகர்கிறது. ஆனால் தொடருந்தில் ஒரு நோயாளிக்கு கர்ப்பம் காரணமாக வயிற்று வலி ஏற்படுகிறது. மேலும் கௌரி சிகிச்சைக்காக அழைக்கப்படுகிறார். கௌரி சிறுமிக்கு சிகிச்சையளிக்கிறார். ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதற்கு அவர் 'சந்தோசு' என்று பெயரிட்டார். அந்நேரத்தில் சந்தோசு அவரை அணுகும்போது, அவர்கள் இருவரும் சேர்ந்து கௌரியின் பெற்றோரிடமிருந்து என்றென்றும் ஒன்றிணைய அனுமதி பெறுகிறார்கள்.
படப்பிடிப்பு (தமிழ்நாட்டிலுள்ள, ஊட்டியிலும் மாமல்லபுரத்திலும் கேரளத்தின் ஆலப்புழா, திருவனந்தபுரம், கொச்சி போன்ற இடங்களிலும் கருநாடகத்தின் மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்தது.[2]
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[3]
பாடல். | பாடகர்(கள்). | நீளம். |
---|---|---|
"புல் புல் தாரா" | அனுராதா ஸ்ரீராம், மனோ | 05:11 |
"கொச்சின் மாடப்புறா" | பி. உன்னிகிருஷ்ணன், சுவர்ணலதா | 05:48 |
"கண்டுபிடி அவனைக்" | ஹரிணி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:13 |
"கோபாமா என்மேல்" | ஹரிஹரன் | 05:44 |
"பாலாரு" | சபேஷ் | 05:34 |
"வானம் தரையில்" | ஹரிஹரன் | 05:57 |
தினகரனைச் சேர்ந்த விமர்சகர் ஒருவர், "திரைப்படத்தின் அனைத்து முக்கியக் காட்சிகளிலும் ஒரு பெரிய சிறப்பம்சம் தங்கர் பச்சானின் சிறந்த ஒளிப்பதிவு! குறிப்பாக கேரளாவின் இயற்கையான காட்சிகள், பாடல்களின் இயற்கையான பின்னணி, நம் கண்களை அழகிய ஆடம்பரத்துடன் நிரப்புகின்றன!" என்று குறிப்பிட்டார்.[4] தி இந்து நாளிதழின் டி. எஸ். இராமானுசம் இவ்வாறு எழுதினார், "இது ஒரு கியூபிட்களின் அம்பு, அதன் இலக்கை அடைவதற்கு முன்பே சக்தியை இழக்கிறது, எனவே இயக்குநர் ஆர். பாலுவின் கதை மிகவும் கடினமானது". மேலும் அவர், "பாடல் காட்சிகளை அமைப்பதில் இயக்குநர் செலுத்திய அக்கறையும் கவனமும், இந்நாடகத்தை நடிப்பதற்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், கதை உள்ளடக்கத்திற்கும் வழங்கப்பட்டிருந்தால் படம் வித்தியாசமாக இருந்திருக்கும், ஏனெனில் தயாரிப்பு தங்கர் பச்சானின் ஒளிப்பதிவைப் போலவே வளமானவை".[5] நியூ சண்டே டைம்ஸின் கே. என். விஜியன், "ஏராளமான பாடல்கள் இல்லையென்றால், இப்படம் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்கும்" என்று எழுதினார்.[6]