உன்னை தேடி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு |
|
கதை | சிங்கம்புலி (வசனங்கள்) |
திரைக்கதை | சுந்தர் சி |
இசை | தேவா (இசையமைப்பாளர்) |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | யூ. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள் |
விநியோகம் | லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள் |
வெளியீடு | 5 பிப்ரவரி 1999 |
ஓட்டம் | 151 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உன்னை தேடி (Unnai Thedi) 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். புதுமுக நடிகையாக மாளவிகா கதாநாயகியாக அறிமுகம் ஆனார். சிவகுமார், மெளலி, ஸ்ரீ வித்யா, விவேக், வையாபுரி, கரண், வாசு, ராஜீவ், ராதாகிருஷ்ணன், மனோரமா, வினுச்சக்கரவர்த்தி, சங்கர் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.[1]
இப்படத்தை கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.[2] பாடல்களை பழனிபாரதி, கலைகுமார், ரவிசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை சுந்தர். சி எழுதியுள்ளார்.