ராணி உமயம்மா | |
---|---|
வேணாட்டு அரசப் பிரதிநிதி [1] ஆற்றிங்கல்லின் ராணி கொல்லத்து ராணி | |
வேணாட்டு அரசப் பிரதிநிதி [1] | |
ஆட்சிக்காலம் | 1677 - 1684 [2] |
முன்னையவர் | ஆதித்ய வர்மா |
பின்னையவர் | இரவி வர்மா |
மரபு | வேணாடு அரச குடும்பம் |
மதம் | இந்து |
சுவாதி திருநாள் உமயம்மா (swathi Thiruna Umayamma) ராணி உமயாம்மா அல்லது ராணி அசூர் என்றும் அழைக்கப்படும் இவர், [3] தென்னிந்தியாவில் இருந்த வேணாட்டில் 1677 ல் 1684 க்கும் இடையே தனது மருமகன் இரவி வர்மா சார்பாக ஆட்சி செய்த மகாராணி ஆவார். [1] in southern India from 1677 to 1684[2] ஆற்றிங்கல்லின் இளைய ராணியாக மூத்த ராணி மகரம் திருநாளின் கீழும் பின்னர் ஆற்றிங்கல்லின் மூத்த ராணியாகவும் ஆட்சி புரிந்தார்.[4][5]
திரிப்பாபூரின் (1684-1718) அரசராக இரவி வர்மா நியமிக்கப்பட்டபோது, உமயம்மா தனது இறையாண்மை அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருந்தார். அந்த சமயத்தில் கேரளாவில் ஆங்கில மற்றும் இடச்சுக்காரர்களுடன் சுயாதீனமாக இவரால் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது. 1688 ஆம் ஆண்டில் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் விழிஞ்ஞம் மற்றும் வல்லியத்துறா அல்லது வேட்டூர் பகுதிகளில் தொழிற்சாலைக்களுக்கானத் தளங்களை கேட்டுப் பெற்றது. 1694 ஆம் ஆண்டில் பாதுகாப்பிற்காக அஞ்சென்கோ என்ற இடத்தில் ஒரு கோட்டை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. உமையம்மா ஆற்றிங்கல் அருகில் உள்ள எடவாவில் இடச்சுக்காரர்களுடன் ஒரு ஒப்பந்தத்தையும் முடித்தார்.
வரலாற்றாசிரியர் கே. வி. கே. அய்யர் என்பவரின் கூற்றுப்படி, ராணி உமையம்மா நிர்வாகத்திற்கான நல்ல அடித்தளம் ஒன்றை அமைத்தார். இதனால் இவரது பேரன் மார்த்தாண்ட வர்மானால் நவீன திருவாங்கூர் கட்டமைக்க முடிந்தது. கே.வி.கிருஷ்ணா அய்யர் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய. "கேரளாவின் ஒரு சிறு வரலாறு" (1966) என்ற நூலில். (பாய் அண்ட் கம்பெனி (கொச்சி) இந்தியா நிறுவனம் வெளியட்டது) [6] இடச்சுத் தளபதி ஹென்ரிக் வான் றீடி (1677 இல் உமையம்மாவை சந்தித்துள்ளார். என்றும், 1694 இல், ஆற்றிங்கல் இராணுவத்தில் 30,000 வீரர்கள் இருந்தனர் என்றும் எழுதினார்.
1698 ஆம் ஆண்டில் வல்லியத்துறாவில் உமயம்மா இறந்தார்.
14 ஆம் நூற்றாண்டில், கோலத்துநாட்டை ஆளும் குடும்பத்திலிருந்து (வடக்கு கேரளா) இரண்டு பெண் உறுப்பினர்களை தத்தெடுக்க திரிபாப்பூர் ஆளும் குடும்பம் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆற்றிங்கல் (சித்ததிங்காரா) என்ற இடத்தில் இரு இளவரசர்களின் குடியிருப்புக்காக ஒரு அரண்மனையை கட்ட ஆற்றிங்கலைச் சுற்றியுள்ள நிலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அதன் விளைவாக அவர்களுக்கு வருவாய் கிடைத்து.[7]
ஆற்றிங்கலின் இளைய / இரண்டாவது ராணி உமயம்மா வேணாட்டின் ராஜா ஆதித்யா வர்மாவின் மகள் (சகோதரன் அல்லது சகோதரியின் மகள்).[7] இவரைத் தவிர, அந்த நேரத்தில் அரச குடும்பத்தின் மற்ற முக்கிய உறுப்பினர்களான மகரம் திருநாள், ஆற்றிங்கலின் மூத்த ராணி, மற்றும் அவரது இளைய மகன், ரவி வர்மா போன்றவர்களும் அரண்மனையில் இருந்தனர் .[8]
உமயம்மா 1678 இல், ஐந்து ஆண்டுகளுக்கு இடைவெளிக்குப் பிறகு, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பூசைகளின் வழக்கமான நடைமுறையை மீண்டும் ஏற்படுத்தினார். அகத்தீசுவரன் ஆலயத்தை புனரமைக்கவும் நிதியளித்தார்.[9]
1672 ஆம் ஆண்டில் உமயம்மா இரண்டு பிள்ளைகள், அதாவது வல்லாரப்பள்ளியைச் சேர்ந்த இராம உண்ணி பண்டாரத்தில் மற்றும் இராம கோயில் ஆகியோரை தத்தெடுத்துக் கொண்டார்.[8] 1678 ஆம் ஆண்டில் ஆற்றிங்கலின் மூத்த ராணி மரணமடைந்ததை அடுத்து உமையாம்மா மூத்த ராணி ஆனார். கோலத்து நாட்டிலிருந்து ஒரு இளவரசன் (ஆதித்யா வர்மா) மற்றும் இரண்டு இளவரசிகளையும் இவர் தத்தெடுத்துக் கொண்டார். நேமம் மற்றும் எடகோடில் நடந்த போரில் வீர கேரள வர்மா தோற்கடிக்கப்பட்டார்.[5][10]