உமா கிருஷ்ணசாமி | |
---|---|
2014 கைதர்ஸ்பர்க் புத்தக திருவிழாவில் | |
தொழில் | எழுத்தாளர் |
காலம் | 1990கள்–தற்போதுவரை |
வகை | சிறுவர் இலக்கியம், அபுனைவு |
இணையதளம் | |
umakrishnaswami |
உமா கிருஷ்ணசாமி (Uma Krishnaswami) குழந்தைகளுக்கான பட புத்தகங்கள் மற்றும் புதினங்களை எழுதிய எழுத்தாளர் ஆவார். இவர் "சர்வதேச மற்றும் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட இளம் வயது புனைகதை மற்றும் சிறுவர் இலக்கியங்களை விரிவாக்குவதில் குறிப்பிடத் தகுந்த நபராகக் கருதப்படுகிறார்." [1]
உமா கிருஷ்ணசாமி 1956 இல் இந்தியாவின் புதுதில்லியில் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் பட்டமும், இந்தியாவின் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [2] 1979 ஆம் ஆண்டில், இவரும் இவரது கணவரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர், அங்கு இவர் பட்டதாரி பட்டம் பெற்றார். [3]