உமா நேருUma Nehru | |
---|---|
பிறப்பு | ஆக்ரா, வடமேற்கு மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 8 மார்ச்சு 1884
இறப்பு | 28 ஆகத்து 1963 இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 79)
தேசியம் | இந்தியாn |
பணி | இந்திய விடுதலை இயக்கம், மக்களவை (இந்தியா) உறுப்பினர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைத் துணை | சாம்லால் நேரு |
பிள்ளைகள் | சியாம் குமாரி கான் ஆன்ந்த குமார் நேரு |
உறவினர்கள் | நேரு-காந்தி குடும்பம் |
உமா நேரு என்பவர் இந்திய விடுதலைப் போராட்டப் பெண்மணி மற்றும் அரசியலாளர் ஆவார். இவர் சவகர்லால் நேருவின் உறவினர் ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உமா ஸ்த்ரீ தர்பன் என்ற மாத இதழில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை எழுதினார். இந்த இதழ் ராமேசுவரி நேரு என்பவரால் தொடங்கப்பட்டது ஆகும். [1] உமா நேரு உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கு கொண்டார். சிறைக்கும் சென்றார். [2] இந்தியா விடுதலை அடைந்த பிறகு இவர் உத்தர பிரதேசத்தில் சித்தாபூர் என்ற தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] மேலும் 1962 முதல் தமது காலம் இறுதி வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[4]
ஆக்ராவில் பிறந்த உமா நேரு ஊப்லியிலுள்ள செயிண்ட் மேரி கான்வென்ட்டில் கல்வி கற்றார். [3] 1901 ஆம் ஆண்டு சவகர்லால் நேருவின் உறவினர் சாம்லாலை மணந்தார். இந்த தம்பதியருக்கு சியாம் குமாரி என்ற மகள், ஆனந்தகுமார் என்ற மகன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். [5] ஆனந்தகுமார் நேருவின் மகனான அருண் நேரு 1980 ஆம் ஆண்டுகளில் இராசீவ் காந்தி அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். உமா நேரு 1963 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 அன்று லக்னோவில் இறந்தார். [6]