உமா ராய் Uma Roy | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967-1971 | |
முன்னையவர் | ரேணுகா ராய் |
பின்னவர் | தினேசு சந்திர இயோடர் |
தொகுதி | மால்டா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1919 ராசசாகி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 19 திசம்பர் 1999 (அகவை 79–80)[1] மால்டா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இராம் அரி ராய் |
பிள்ளைகள் | திலக் ராய், தீபக் ராய், பிரபாவதி சக்கரவர்த்தி |
வாழிடம் | மால்டா |
மூலம்: [1] |
உமா ராய் (Uma Roy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1919 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மால்டா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மால்டாவில் ஓர் உயர்நிலைப் பள்ளியின் நிறுவனராகவும் அறியப்படுகிறார். ஒரு பொதுநல அமைப்பை நிறுவி, மால்டாவில் கூட்டுறவு அமைப்பாக ஏழை மற்றும் ஏழை பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பை வழங்கினார்.[2][3][4] 1999 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று உமா ராய் காலமானார்.