உயர்வு நேரம் (rise time) என்பது மின்னழுத்தம் அல்லது மின்சாரப் படிச் சார்பினை விளக்கும்பொழுது, ஒரு குறித்த குறைந்த மதிப்பில் இருந்து குறித்த உயர்ந்த மதிப்பை குறிகையான மாற எடுத்துக்கொள்ளும் நேரம். அதே போன்று ஒப்புமை மின்னணுவியலில், இந்த மதிப்புகள் 10% இருந்து 90% வரை படியுயரம் அடையும். கட்டுப்பாட்டு கோட்பாடில், லெவைன் (லெவைன் 1996, ப. 158) கூற்றின் படி, உயர்வு நேரம் என்பது முடிவு மதிப்புடைய x% முதல் y% வரை உயர எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும். மேலும் குறைந்த ஒடுக்க இரண்டாம் நிலை கட்டகங்களுக்கு 0%-100% என்றும், உய்ய ஒடுக்கத்திற்கு 5%-95% வரை என்றும், மிகையொடுக்கத்திற்கு 10%-90% என்றும் விளக்கியுள்ளார்.[1] வெளியீடு குறிகையின் வீழ் நேரத்தையும் சார்ந்துள்ளது. இரண்டு அளப்புருக்களும் (உயர்வு நேரம் மற்றும் வீழ் நேரம்) உள்ளீடு குறிகையையும், கட்டகத்தின் தன்மையும் சார்ந்ததாக உள்ளது.