Pyura chilensis | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Pleurogona
|
துணைவரிசை: | Stolidobranchia
|
குடும்பம்: | Pyuridae
|
பேரினம்: | Pyura
|
இனம்: | P. chilensis
|
இருசொற் பெயரீடு | |
Pyura chilensis (Molina, 1782) |
உயிரிப்பாறை அல்லது பையூரே எனப்படுவது பார்ப்பதற்குப் பாறை போன்ற அமைப்புடைய கடற்பீச்சிகள் எனும் உயிரியல் வகுப்பைச் சார்ந்த சிலி நாட்டுக் கடற்கரைப்பகுதியில் வாழும் உயிரினமாகும். டியுனிகேட்டா (கவச முதுகுநாணிகள்) எனும் துணைத் தொகுதியில் அசிடியாசியா (கடற்பீச்சிகள் ) எனும் வகுப்பில் பையுரிடே எனும் குடும்பத்தில் அமைந்துள்ளது. இதன் உயிரியற் பெயர் பையுரா சிலென்சிசு மொலினா (Pyura chilensis molina). இதனை சுவான் இக்னசியோ மொலினா என்பவர் 1782 இல் முதன் முதலாய் விவரித்தார்.[1]
பாறை ஒன்றுக்குள் உயிரியின் பல்தொகுதி உறுப்புகள் அடங்கி இருப்பதைப்போன்று இந்த உயிரினம் அமைந்துள்ளது. வெளித்தோற்றம் கடற் பகுதியில் காணப்படும் பாறை போன்றும் உள்ளே அதனது தசை, உறுப்புகள் அமைந்தும் இருகின்றது.
இந்த உயிரினத்தை வெட்டினால் சிவந்த நிறத்தில் குருதி வெளிப்படுகின்றது. இதன் மாமிசம் சிலி நாட்டவரின் உணவு வகைகளுள் ஒன்றாக இருக்கின்றது. சோற்றுடன் சிறு சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட உயிரிப்பாறை இறைச்சியை சமைத்து உண்கின்றனர். இந்த உயிரிப்பாறைகள் உணவாக உட்கொள்ளப்படினும் அவற்றின் குருதியில் உள்ள வனேடியம் எனும் தனிமம் நஞ்சு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.[2] இவ்விசித்திர விலங்கைச் சூழ உள்ள கடல் நீரில் உள்ள வனேடியத்தின் அளவு இவ்விலங்கில் காணப்படும் வனேடியத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் பத்து மில்லியன் மடங்கு குறைவானது. பையுரா சிலென்சில் அமைந்துள்ள வனேடியத்தின் தொழிற்பாடு அறியப்படவில்லை. இதன் மணம் அயோடின் மிகையாகக் காணப்படுவதில் தங்கியுள்ளது. எனினும் இதனது சுவையுடன் வனேடியம் தொடர்பு கொண்டுள்ளது.[3]
இது பிறக்கும் போது ஆணாகப் பிறந்து பூப்புப் பருவத்தில் இருபால் உயிரி (அழிதூஉ) நிலையை அடைகின்றது. இது இனப்பெருக்கத்தின் போது விந்துகளையும் சூல்களையும் கடல் நீருக்குள் வெளியேற்றுகின்றது. நீருக்குள் கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழ்ந்த பின்னர் சிறிய தலைப்பிரட்டை (tadpole) போன்ற வடிவத்தையுடைய சந்ததிகள் உருவாகி பாறைகளை அண்மித்து அங்கே வளர்ச்சியுறுகின்றன.