டுரோசொபில்லா மெலனோகாசுட்டர்-பொதுவாக பயன்படும் வகைமை உயிரினம்
உயிரியல் உருவரை (outline of biology) உயிரியல்சார் கருப்பொருள்களுக்கும் தலைப்புகளுக்குமான வரைவுரு கீழே வழங்கப்படுகிறது.
உயிரியல் உயிரினங்களை பற்றிய அறிவியல். இது பண்புகள், வகைபாடு, உயிரிகளின் நடத்தைகள், சிற்றினங்களின் இருப்பு, மற்றும் சூழ்நிலையுடனான அவற்றின் தொடர்பு பற்றிய புரிதலையும் அறிவையும் வழங்கும் ஒரு பிரிவாகும். மேலும் இது பரந்துபட்ட உள்ளடக்கங்களை கொண்ட பிரிவாக உள்ளது. எனினும் உயிரினங்களிடையேயுள்ள உறவுகளை உயிர் இயற்பியல் தொடங்கி சூழியல் வரை உயிரியல் புலம் உள்ளடக்குகிறது. உயிரியலில் சொல்லப்படும் அடிப்படைக்கொள்கைகள் அதன் சேய்த்துறைகள் அனைத்தாலும் ஏற்கப்படுகிறது. இதற்கு சான்றாக வெப்ப இயக்கவியல் மற்றும் ஆற்றல் அழிவின்மை விதி உள்ளிட்டவைகள் உள்ளன.[1]