உயிர் கனிமவேதியியல் விருது (Bioinorganic Chemistry Award) உயிர் கனிம வேதியியலின் வளர்ச்சிக்காக சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களுக்காக வழங்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயல்படும் இராயல் வேதியியல் கழகத்தின் டால்டன் பிரிவு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உயிர் கனிமவேதியியல் விருதை வழங்கி வருகிறது. இவ்விருதைப் பெறும் அறிஞர் இங்கிலாந்தில் ஒரு விரிவுரை நிகழ்த்துவதற்கான சுற்றுப்பயணமும், £ 2000 பணமுடிப்பும் ஒரு பதக்கமும் பரிசாக வழங்கப்படுகின்றன.[1]
ஆதாரம்: [2]
2017 | தாமசு ஆர். வார்டு[3] | பாசெல் பல்கலைக்கழகம். |
2015 | பால் யே டைசன்[4] | எக்கோல் பாலிடெக்னிக் பெடரல் டி லாவ்சானி |
2013 | தாமசு வி. ஓ ஆலோரான்[5] | நார்த் வெசுட்டன் பல்கலைக்கழகம் |
2011 | யேம்சு ஏ. கோவன் | ஓகியோ மாநில பல்கலைக்கழகம் |
2009 | கிரிசு ஆர்விக்கு | பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம் |